வீடியோ பஃப்பரிங் பிரச்சனையைச் சரி செய்யும் ஐந்து வழிமுறைகள்

ஆன்லைன் மூலம் வீடியோ அல்லது பாடல்களை கேட்பது மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும். ஆனால் வேகமான இண்டர்நெட் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆன்லைன் தரவுகளை பார்க்கும் போது இடைய வரும் பஃப்பரிங் நம்மை எரிச்சலடைய செய்யும்.

ஆன்லைனில் வீடியோ பார்க்கும் போது "Video is buffering" என்ற வார்த்தையுடன் லோடிங் ஆகும் திரையை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கடுப்பாகி விடுவர். இதற்கு நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரே யுக்தி வீடியோ முழுமையாக லோட் ஆகும் வரை காத்திருப்பது தான். ஆனால் இதற்கும் பொறுமை அவசியம்.

இன்று நமக்கு இருக்கும் வேலைப் பளுவில் பஃப்பரிங் எதுவும் இன்றி, வீடியோ மற்றும் பாடல்களை அனுபவிக்க சில வழிமுறைகளைத் தான் இங்கு வழங்கி இருக்கின்றோம்..

வன்பொருள்

பிளாஷ் வீடியோக்களுக்கான ஹார்டுவேர் அக்செல்லரேட்டரை ஆஃப் செய்ய வேண்டும், இதனால் சாஃப்ட்வேர் அக்செல்லரேட்டர் குறைந்தளவு வீடியோ ஷட்டரை குறைத்து பஃப்பரிங் பிரச்சனைகளை சரி செய்யும். இவ்வாறு செய்வதால் குறைந்த ஹார்டுவேர் மற்றும் ஒரிஜினல் வீடியோ தரம் அதிகரிக்கும்.

பிளாஷ் பதிப்பு

வீடியோவினை பிளே செய்யும் முன், உங்களிடம் மேம்படுத்தப்பட்ட பிளாஷ் பிளேயர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் சமீபத்திய வீடியோ கார்டு டிரைவர் வீடியோ ஸ்ட்ரீமிங் மென்பொருளுடன் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
தரம்

சில சமயங்களில் வீடியோவின் தரத்தினை குறைத்து பார்க்கலாம். இது நல்ல யோசனையாக இல்லை என்றாலும், மிகக் குறைந்த இண்டர்நெட் வேகத்தில் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் வீடியோ பஃப்பர் ஆகாது.

ஐசோலேட்

மற்ற இண்டர்நெட் சேவைகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு அதன் பின் வீடியோக்களை பார்க்க துவங்கலாம். இவ்வாறு செய்யும் போது இண்டர்நெட் பயன்பாடு குறைக்கப்பட்டு முழு சேவையும் வீடியோ பார்க்க மட்டுமே பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வது பஃப்பரிங் பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

வையர் கனெக்ஷன்

வயர்லெஸ் கனெக்ஷனை விட வையர் மூலம் இணைக்கப் பெற்ற இண்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும்.

எவ்வித தடையுமின்றி வீடியோக்களை அனுபவித்த ஸ்ட்ரீமிங் கருவியினை வையர்லெஸ் சிக்னல் கருவியின் அருகே வைத்து வையர்லெஸ் ரவுட்டரின் சேனல் நம்பரை மாற்றியமைக்கலாம். இவ்வாறு செய்வது நல்ல பலன்களை தரும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (3-Oct-16, 8:52 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே