உணர்ந்தேன் வலியை

பிறந்தநாள் விழா....

வந்திருப்பவர்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்த ரம்யா தனது 4 வயது குழந்தை வருணுடன் தனது தோழி ஒருத்தி பேசிக்கொண்டிருப்பது காதில் விழவே அதை கவனித்தவள் முதன் முறையாக தான் சிறு வயதில் தாயை எவ்வளவு வருத்தத்திற்கு உண்டாக்கினோம் என்று வருத்தம் கொண்டாள்.

உனக்கு அம்மா பிடிக்குமா..? அப்பா பிடிக்குமா...? இரண்டு பேர்ல யாரை உனக்கு ரொம்ப பிடிக்கும்...?

எனக்கு அப்பா தான் பிடிக்கும்....

அப்படியா அப்போ அம்மா பிடிக்காதா....

ம்.... பிடிக்கும்....

இந்த பதில் கூட ஒரு ஆறுதல் தந்திருக்கும்.. ஆனால் அதை கூட நினைவு தெரிந்த வயதிலும் அவள் சொன்னதில்லை....

ரம்யா உனக்கு அப்பா பிடிக்குமா இல்ல அம்மா பிடிக்குமா? என்று கேட்டால் உடனே அவள் சொல்வது ' எனக்கு அப்பா மட்டும் தான் பிடிக்கும் '

ஏன் அப்பா மட்டும் தான் பிடிக்கும்னு சொல்ற அம்மா பிடிக்காதா...

ம்..... இல்ல... பிடிக்காது...

ஏன்? அம்மா அடிப்பாங்களா? இல்ல திட்டுவாங்களா? எதனால பிடிக்கலைனு சொல்ற...?

அப்படியெல்லாம் எதும் கிடையாது... அம்மா என்னை அடிக்கெல்லாம் மாட்டாங்க ஆனா.. எனக்கு என்னோட அப்பா மட்டும் தான் எப்பவும் பிடிக்கும்....

அது சரிமா.... ஆனா நீ இப்படி சொல்றது அம்மாக்கு கஷ்டமா இருக்காதா.. யார் கேட்டாலும் எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும்னு சொல்லனும்... சரியா.... நீ நல்ல பொண்ணு தானே.... என்று தனக்கு அறிவுரை கூறுபவர்களிடம் சும்மா வேணும் தலை ஆட்டி வைத்தாள்.

ஏனோ அவளுக்கு தனக்கு தனது அப்பா தான் மிகவும் பிடிக்கும் என்பது சொல்வதில் அளாதி பிரியம்.ஆனால் தான் அவ்வாறு கூறியதை கேட்டு தனது தாய் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார் என்று இன்று தான் ஒரு தாய்யாய் இருக்கும் போது தான் உணர்கின்றாள்.

அம்மா பிடிக்காது என்று கூட சொல்லவில்லை.. பிடிக்கும் என்று சொல்வதற்கு முன் அப்பா தான் பிடிக்கும் என்று சொன்னதே தன்னை இவ்வளவு வேதனை படுத்துகின்றதே..... என்று மனம் நொந்தவள் உடனே தனது தாய்க்கு போன் செய்தாள்.

அழுகையில் தொண்டை அடைக்க.....

சாரிமா.... என்னை மன்னிச்சிடுமா...
உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்..... என்னை மன்னிச்சிடுமா பிளீஸ்......

ஒரு வழியாக தனது தாயிடம் தனது மன கஷ்டத்தை பகிர்ந்து தான் அறியாமல் செய்த தவறுக்கும் வேதனை தந்து வருத்தியதற்கும் மன்னிப்பு கேட்டு அழுத பின் தான் அவள் மனம் அமைதி ஆனது.

அழுதிருத்த அன்னையின் முகத்தை பார்த்த வருண் ' என்னாச்சுமா.... உடம்பு சரியில்லையா.....'

இல்லை என்று தலை அசைத்தவள் ' வருண் உனக்கு அம்மா பிடிக்கும் தானே....'

ம்ம்ம்ம்.... பிடிக்குமே....
என்று புன்னகை சிந்திய தனது செல்லத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள் மனதில் நிறைவுடனும் மகிழ்ச்சியோடும்..

பிறந்த நாள் விழா இனிதே தொடங்கியது.....

எழுதியவர் : நித்யஸ்ரீ (6-Oct-16, 8:20 pm)
பார்வை : 520

மேலே