ஸ்டார்ட்டப் திட்டம்
சரவணன் நான்காம் வருடம் பொறியியல் படிப்பவன்,கல்லூரி வளாகத்தில் ஒரு மரத்தடியில் சோகமாக அமர்ந்திருந்தான். அதே கல்லூரியில் நான்காம் வருடம் பொறியியல் படிக்கும் மாலதி அருகில் வந்தாள்.
"என்ன சரவணன் சோகமா ஒக்காந்திருக்கே?"
" ஒனக்கு கவலையே இல்லையா? நமக்கு வளாக நேர்காணலில் வேலைக்கு தேர்வாகலே! எப்படி வேலை கிடைக்கும்னு நெனைக்கிறே? எப்படி ஜாலியா இருக்கே?"
" என்ன நொந்து பேசறே சரவணன்? நானும் நீயும் இப்படி அதைரியப் படலாமா? அப்புறம் மத்தவங்களுக்கு எப்படி தைரியம் வரும்?"
" என்ன உளர்றே? நம்ம ரெண்டு பேரும் என்ன கடவுளா?"
" மனுஷங்கதான்! உன் அப்பாவிடமும் கொஞ்சம் பண வசதி இருக்கு; என் அப்பாவிடமும் பண வசதி இருக்கு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பார்ட்னராகி ஏன் ஒரு தொழில் துவங்க கூடாது? உன்னிடமும் புதுமையான ஐடியாக்கள் இருக்கு; என்னிடமும் இருக்கு. எதுக்கு வேலை தேடணும்? தொழிலை வளர்த்து வேலைகள் மத்தவங்களுக்கு கொடுப்போம்! "
" மறுபடியும் உளர்றே மாலதி.பணமும் ஐடியாக்களும் இருந்தா போதுமா? யார் ஆலோசனைகள் தருவார்கள்? நம்ம திட்டங்களுக்கு எப்படி செயல் வடிவம் கொடுப்பது?"
" கவலைப்படாதே சரவணன்! இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்டார்ட்டப் இந்தியா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. .அதற்கென உள்ள விவரங்களை இருவரும் பார்ப்போம். நிறைய தகவல்கள் உள்ளன. படித்து விட்டு நல்ல எதிர்காலத்தை சந்திப்போம்"
" முதல் போதவில்லை என்றால்?"
" இன்னும் சில மாணவர்களை தொழிலில் சேர்த்துக் கொள்வோம்: அதற்கும் வழி சொல்வார்கள் ஸ்டார்ட்டப் திட்டத்தில்! வெற்றி நமதே!" சரவணன் மகிழ்ந்தான்.