பொம்மை

என் பேத்தி மைத்திரேயியின் இவ்வுலக வருகையை வரவேற்கத்தானோ என்னவோ இயற்கை ஸ்னோவைப் பொலிந்து, தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தது. இந்த முறை வெள்ளைக் கிறிஸ்மஸ் என்று பலர் சொன்னது உண்மையாகுமோ என நான் நினைத்தேன். கிறிஸ்மஸ்சுக்கு இன்னும் மூன்று தினங்களே இருந்தன. ஸ்னோ தொடர்நது கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. முதல் தடவையாக நான் என் பேத்தியைப் பார்த்தபோது அவள் அமைதியாக தொட்டிலில் விரல் சூப்பியபடி தூங்கிக் கொண்டிருந்தாள். மைத்திரேயியுக்கு பிறக்கும் போது தலை நிறம்ப கறுத்த தலை முடி. கொழு கொழு வென்ற சிவந்த கன்னங்கள். உருண்ட கண்கள். சிறிய வாய். அவள் ஒன்பது இறாத்தல் குழந்தை. அவள் பிறந்து ஒரு தினம் கூட ஆகவில்லை. கண்களைத் திறந்து உலகைப் பார்க்க அவள் விருப்பப் படவில்லை. பெண் பிறந்தால்> என் மகள் என் பேத்திக்கு “மைத்திரேயி என்ற பெயர் வைக்க ஏற்கனவே தீர்மானித்துவிட்டாள். எனக்கும் என்மனைவிக்கும் அப் பெயர் பிடித்துக்கொண்டது.

“ என்னப்பா யோசிக்கிறியள்? உங்களுடைய பேத்தியின் பெயரைப்பற்ற தானே?. மைத்திரேயி என்ற பெயரை வைக்க தீ;hமானித்திருக்கிறன். மைத்திரேயி கிமு700 ஆம் நாற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண் தத்துவ ஞானி. அவளைப் பற்றி ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுளது. யுக்னஞவல்கிய மஹாரிஷி என்பவரிடம் இருந்து அறிவைப் பெறவே மைத்திரேயி அவரது இரண்டாவது மனைவியானாள். ஆனால் தாம்பத்திய வாழ்க்கை நடத்தவில்லை. நான்கு வேதங்களை நன்கு தெரிந்தவள்; மைத்திரேயி” என்று எனக்கு விளக்கம் கொடுத்தாள் என் மகள்.

“நல்ல ஆழமான கருத்துள்ள பெயர்தான் வைத்திருக்கிறாய். உன் மகளும் வருங்காலத்தில் ஒரு தத்துவஞானியாக வருவாள் என்று எதிர்பார்க்கிறேன். வீட்டிலை இவளை “மைத்தி” என்று செல்லமாகக் கூப்பிடலாம்” என்றேன்.

தொட்டிலில் மைத்திக்குப் பக்கத்தில் துணையாக ஒரு அழகிய பொம்மையிருந்தது.

“யார்; இந்த அழகான பொம்மையைக் பரிசாகக் கொடுத்தது?. விலை உயர்ந்த பொம்மை போல் இருக்கிறதே” நான் என் மகளிடம் கேட்டேன்.

“ வேறு யார்? என் சினேகிதி; சுசிலா தான். மைத்திரேயி பிறந்த நாளன்றே குழந்தையை பார்க்க வரும் போது கொண்டு வந்து கொடுத்த பரிசு.”

“இது ஒரு விலை உயர்ந்த பார்பி ( Barbie) பொம்மை. இதை 1959 ஆம் ஆண்டு ருத் என்பவர் தன் மகள் பாபரா (Barbra) ஞாபகமாக உருவாக்கினார். அது தெரியுமா உனக்கு? நான் மகளைக் கேட்டேன்.

“தெரியும் அப்பா எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பரிசு கோடுக்கலாம் என்று கிச்சினரில் உள்ள மோலில் கடைகளைத் தேடியபோது ஒரு கடையில் தனித்து இருந்த ஒரே ஒரு பார்பி பொம்மையைத் தான் கண்டதாகவும்> பார்க்க அழகாக இருந்த படியால் உடனே கடைக்காரன் சொன்ன விலைக்குத் தான் வாங்கிவிட்டதாக சுசிலா சொன்னாள்” என்றாள் என் மகள்.

“ பொம்மைக்கு என்ன பெயர் வைக்க யோசித்திருக்கிறாய்?:” நான் கேட்டேன்.

“ பார்பி என்ற பெயர் அழகான, சுருக்கமான, பொருத்தமான பெயர்”; என்றாள் என் மகள்;.

“ நல்ல பெயர் தான்” என்றேன்;.

என் பேத்தி பிறக்க முன்பே தாயின் கருவில் இருக்கும் போது துடியாட்டம் உள்ளவளாக இருந்தாள். அவளுடைய அசைவுகளை அல்டிராசவுன்டில் (Ultra Sound) பார்க்கக் கூடியதாக இருந்தது. பிறந்தவுடன், நேர்ஸ் பரிசோதனைக்கு காலில் இரத்தம் எடுக்க முயன்ற போது காலால் அவளை உதைத்து தன் எதிர்ப்பைக் காட்டினாள் மைத்திரேயி;.

பிறந்து சில நாட்களுக்குள் தனக்கு பக்கத்தில் இருந்த பார்பியை முறைத்துப் பார்க்க தொடங்கினாள் மைத்திரேயி.
“ நீ யார் என்னோடு படுக்கையைப் பங்கு கொள்வதற்கு”? என்பது போல இருந்தது அவளது பார்வை.

மைத்திக்கு தன்னுடைய படுக்கையை பங்கு கொள்ளும் பொம்மையின் பெயர் தெரியாத வயது. சுசிலா மைத்திரேயியைப் பார்த்து “இது உனது சினேகிதி பார்பி. இனி இவளோடு நீ விளையாடலாம். பார்பி பேசாவிட்டாலும் நீ அவளோடு பேசலாம்.” என்று பார்பியை மைத்திக்கு அறிமுகப்படுத்;தி வைத்தாள். பார்பியின் சிமிட்டாத பெரிய கண்களும்> போட்டிருந்த புள்ளிகள் போட்ட சட்டையும் மைத்தியை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

ஒருமாதத்துக்குள் மைத்திரேயி பார்பியோடு தன் பாஷையில் ஆ .. ஊ என்று பேசத் தொடங்கிளாள்.
“எனக்கு என் அம்மா அடிக்கடி உடுப்பை மாற்றுவாள், ஆனால் பார்பிககு உடுப்பு மாற்ற ஒருவருமே இல்லை. பார்பி தன் உடுப்பையும், நிக்கரையும்; மாற்றுவதில்லை, குளிபதுமில்லை என்று மைத்திரேயி கவலைப்பட்டு, தன் கவலையைச் தன் செயல் மூலம் காட்ட முயற்சித்தாள். பார்பியின் வருகையால் மைத்தியிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. மைத்தி தன் பெரு விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்திவிட்டாள். பார்பியை இறுக்க அணைத்தபடி கொஞ்சுவாள். மைத்திரையி நித்திரை செய்யும் போது எப்போதும் பார்பி அவள் அருகே இருந்தாக வேண்டும்.

******

ஒரு நாள்; பார்பி பேசுவதைக்கண்டு மைத்திரேயி ஆச்சரியப்பட்டாள்.

“ஹலோ மைத்தி எப்படியிருக்கிறாய்?” கீச்சிட்ட குரல் கேட்டது..

மைத்திரேயி பார்பி பேசுவதைக் கேட்டு ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்தாள்.

“ மைத்தி உனக்கு ஒரு முத்தம் தர எனக்கு உன கன்னத்தைத் தா ”, பார்பி மைத்தியை நோக்கி அசைந்து முத்தம் கேட்டது. மைத்தி தன் ஒரு கன்னத்தை பார்பிக்கு அருகே அசைந்து கொடுத்தாள்.

பார்பி மைத்திக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.

“ பார்பி உம்மா.. “என்று அவளும் பதிலுக்கு பார்பிக்கு முத்தம் கொடுத்தாள். தொடர்நது பார்பி மைத்தியோடு கதைத்தது. தனது தாத்தா தான் பார்பி கதைப்பது போலத் தன் குரலை குழந்தையின் குரல் போல் மாற்றி பொமமையை அசைத்து பேசுவது போல் செய்கிறார் என்பது அவளுக்குத் தெரியவில்லை. எனக்கு குரலைமாற்றி வென்டிரிலோக்கிஸ்ட் (Ventriloquist) போல செயலாற்றும் கலைத் திறன் இருக்கிறது என்பதைக் குழந்தை மைத்திரேயி அறிவாளா என்ன? பார்பி தன்னோடு பேசுவதாக நினைத்து மைத்தி கைதட்டி சிரித்து மகிழ்ந்தாள்.

இந்த சம்பவம் நடக்கும் போது மைத்திரேயி ஒன்பது மாதக் குழந்தை. திரும்பத் திருப்ப மைத்திரேயி பார்பிக்கு முத்தம் கொடுத்தாள். அவள் செயல் பார்பிமேல் மைத்திரேயி எவ்வளவுக்கு அன்பு வைத்திருக்கிறாள் என்பதைக் காட்டியது. தாயோடு மைத்தி வெளியேசெல்லும் நெரமெல்லாம் பார்பியையும் தன கூடவே அழைத்துச் செல்வாள்.

அன்று மழை பெய்து கொண்டிருந்து. வெளியே மைத்தி தாயோடு சென்ற போது கைதவறி பார்பியை கீழே போட்டுவிட்டாள். மழை நிரில் பார்பி நனைந்துவிட்டது. பார்பியைக் தன பிஞ்சுக் விரல்களால் காட்டி பார்பி, பார்பி என்று மைத்தி அழத்;தொடங்கினாள். அவள் அழுகையை நிறுத்தமுடியாத என் மனைவி பார்பியை எடுத்து ஹெயார் டிராயரில் காயவத்து கொடுதத் பின்னரே மைத்தி அழுகையை நிறுத்தினாள். பார்பி திரும்பவும் கையில் கிடைத்தவுடன் மைத்தியின முகத்தில் ஒரு சிரிப்பு. அவளது ஆனந்தக் கண்ணீர் துளிகள் பார்பிமேல் விழுந்தன பார்பிக்கு முத்தங்கள் பொலிந்தாள். அக்காட்சி என் மனதைத் தொட்டுவிட்டது..

ஒரு வயதானதும் மைத்தி பார்பியை பெயர் சொல்லி அழைக்கத் தொடங்கிளாள். ஒரு நாள் என் மகள், மனைவியோடு நான் மோலுக்கு போகும் போது தன் சினேகிதி பார்பியையும் மைத்தி எடுத்துச் வந்தாள். . வீடு திரும்பிய போது மைத்திக்கு போத்தலில் பால் குடிக்க கொடுக்க முன்பு; மைத்தியின் கையில் பார்பி இருக்காததை என் மனைவி கண்டு விட்டாள். பார்பியில்லாவிட்டாள் பால் குடிக்க முடியாது என்று அடம் பிடித்து மைத்தி அழத் தொடங்கினாள். வீட்டில் எல்லோரும் பார்பியைக் காணாமல் பீதியடைந்தனர். வீடு அல்லோலகல்லோலப் படுமென எல்லோருக்கும் தெரியும். பார்பியை உடனே எல்லோரும் தேடத் தொடங்கினோம். என் மனைவி தன்னிடம் இருந்த பார்பி போன்ற தோற்றமுள்ள வேறு பொம்மையை மைத்தியிடம் கொடுத்து அவளை சமாதானப்படுத்த முயற்சித்தாள். அது முடியவில்லை. இது பார்பியில்லை என்று என் மனைவி கொடுத்த பொம்மையை வாங்க மறுத்தாள் மைத்தி. சிலசமயம் மோலுக்குப் போன இடத்தில் மைத்தி பார்பியை தொலத்து இருப்பாளோ என நினைத்து என் மனைவியும் மகளும் மைத்தியும் பார்பியைத் தேடி மோலுக்குப் போனார்கள். நானும் அவர்களோடு பார்பியைத் தேடப் போனேன். கடைகள் மூடுவதற்கு ஒரு மணித்தியாலமே இருந்தது> அவர்கள் போயிருந்த எல்லாக் கடைகளிலும் சல்லடை போட்டுத் தேடினோம். பார்பி கிடைக்கவில்லை. என் மகள் தன் சினேகிதி சுசிலாவோடு தோடர்பு கொண்டு பார்பி வாங்கிய கடைக்காரனிடம் இன்னொரு பார்பி பொம்மை ஒன்றை வாங்க முடியமா என்று முயற்சிப்பதாகச் சொன்னாள்.

பார்பியை தேடி அலுத்துப்போய் நாங்கள் கார் பாக்கிற்கு போகும் போது, மைத்தி எங்களுக்கு முன்னால் நடந்து போய் கொண்டிருந்த கனேடியப் பெண் ஒருத்தியைச் சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் “ மை பார்பி. மை பார்பி” என்று குளரி அழத் தொடங்கினாள். என் மனைவி அப்பெண்ணியின் கையில் பார்பி இருப்பதைக் கண்டுவிட்டாள்.

ஆங்கிலத்தில் “மன்னிக்கவும் மெடம். எனக்கு என் பேத்தியால் ஒரு பிரச்சனை. வெகுநேரமாக அழுதுகொணடே இருகிறாள்” என்றாள் என் மனைவி;.

“ ஏன் பசியால் அழுகிறாளா அல்லது குழந்தைக்கு ஏதும’; சுகமில்லையா”? அப்பெண்மணி கேட்டாள்.

“ அப்படி ஒன்றுமில்லை மெடம். அவள் தன் சினேகிதி பார்பியைத் தேடி அழுகிறாள். ஒரு மணித்தியாலத்துக்கு முன் அவள் சினேகிதி காணாமல் போய்விட்டாள்” என்றேன் நான்.

“ அப்படியா?. பொலீpசிலை போய் உடனே முறையிட வேண்டியதுதானே” என்றாள் அப்பெண்மணி;.

“ மன்னிக்கவும். பொலீஸ் உதவ முடியாது” என்றேன் நான்.

“ ஏன் அப்படி?”அப் பெண்மணி கேட்டாள்.

“ எனது பேத்தியின் சினேகிதி உங்கள் கையில் இருக்கும் பார்பி என்ற பொம்மை. அந்தப் பொம்மை தான் அவள் சினேகிதி. பார்பி மேல் அவளுக்கு உயிர்.” ஏன்றேன் நான்.

“ ஓ அப்படியா?. இந்தப் பொம்மையை கார் பார்க் செய்யும் இடத்தில் நான் கண்டெடுத்தேன். பொமமையை எடுத்து பார்தபோது கார் ஒன்று பொம்மை மேல் போயிருந்தது தெரிந்தது. அழுக்கு படிந்து போன பொம்மையை குப்பைக் கூடைக்குள் எறிய இருந்தனான். நல்லாகாலம் அதற்கு முன்னமே என் கையிலுள்ள பார்பி பொம்மையைக் கண்டுவீட்டீர்கள்” என்றாள் அப்பெண்மணி

மைத்தி கவனமாக எங்கள் சம்பாஷணையைக் கெட்டுக் கொண்டிருந்தாள் அவள் பார்வை முழுவதும் அப்பெண்மணியின் கையில் இருந்த அழுக்குப்படிந்த பார்பிமேலேயே இருந்தது.

“பார்பிமேல் கார் போய் அழுக்காகியிருந்தாலும் மைத்திக்கு பரவாயில்லை. பார்பி திரும்பவும் கிடைத்ததே அவளுக்குத் திருப்தியாக இருக்கும்” என்றாள் என்னோடு இருந்த என் மகள்.

அப்பெண்மணி சிரித்துவிட்டு என் மகள் கையிலிருந்த மைத்தியை நோக்கிப்; போனாள். மைத்தியும் அழுகையை நிறுத்திவிட்டு பார்பியை அப்பெணமணியிடம் இருந்து வாங்கத் தயாராக இருந்தாள்.

“ குழந்தை உன் சினேகிதியின் பெயர் என்ன’? அப்பெண்மணி மைத்தியைப் பார்த்துக் கேட்டாள்.

அதற்கு மைத்தி> தன் விரல்களை பார்பியை நோக்கிக் காட்டி “மை பார்பி;. கிவ் மீ மை பார்பி ;” என்றாள் ஆங்கிலத்தில் தன் மழலையில்.

மைத்தியின் வெண்டுகோளைப் பூர்த்தி செய்ய, தாமதிக்காமல் “ குழந்தை இதோ உன் சினேகிதி பார்பி. திரும்பவும் பார்பியைத் தொலைத்து போடாதே” என்று சொல்லி பார்பி பொம்மையை மைத்தியின் கையில் கொடுத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் அப்பெண்மணி;.

கையில் பார்பி கிடைத்தவுடன்> மைத்தி; மாறி மாறி பொம்மைக்கு முத்தம் சொரிந்தாள். அழுகை நின்றுவிட்டது. அந்த சந்தர்ப்பத்தை நலுவ விடாமல் என் மகள் தன் கை பையுக்குள் இருந்த பால் போத்தலை எடுத்து மைத்திக்கு பால் கொடுக்கத் தொடங்கினாள். அப்பெண்மணி எங்கள் கண்களுக்கு ஆபத்தில் உதவிய தேவதையாகப் பட்டது.

******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - மிசிசா (7-Oct-16, 12:16 am)
Tanglish : pommai
பார்வை : 473

மேலே