​ஐந்தறிவும் மிஞ்சிடும் ஆறறிவை

​பாசமெனும் உணர்வும் பொங்கிடும்
காட்டிடும் அன்பால் கரைந்துபோகும்
ஐந்தறிவும் மிஞ்சிடும் ஆறறிவை !

வீதியெனும் வீட்டிலே இடமின்றி
​அமர்ந்துள்ள முதியவர் அலசுகிறார்
​கடந்திட்ட வாழ்க்கையின் நிகழ்வுகளை
கையிலே அணைத்துள்ள நாய்களுடன் !

கட்டியவளும் உடனில்லை ஆதரவாய்
​பெற்றெடுத்த மக்களும் கைவிட்டநிலை
பாசத்தையும் பகிர்ந்திட எவருமில்லை
​நன்றியுள்ள நாய்கள்தான் அணைப்பிலே !

வளர்த்து ஆளாக்கி உருவாக்கினோன்
வசதியுடன் வாழ்ந்திட வழிசெய்தேன்
காலத்தே கடமைகளை ஆற்றினேன்
இருப்பதோ வீதியிலே அனாதையாய் !

நாயன்றோ காக்குது என்னையும்
​ஈன்றிட்டக் குட்டிகளோ சுற்றிவருது !
அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துது
அடியேனின் துயரையும் அகற்றுகிறது ! ​

பழனி குமார்
-------------------------------------------------

எழுதியவர் : பழனி குமார் (8-Oct-16, 8:45 am)
பார்வை : 187

மேலே