அழகே தமிழே தொன் மொழியே

தொன் மொழி
தென் மொழி
திராவிடத் தனி மொழி
எங்கள் தமிழ் மொழி
முடி மன்னர் மூவர்
மடியில் வளர்ந்த மொழி
தனித்தமிழ் கடவுள் முருகன்
தந்த மொழி
தொல்காப்பியன் இலக்கணம்
வகுத்த மொழி
ஒளவை பிராட்டி வளர்த்த மொழி
வள்ளுவன் தந்த
வேத மொழி
கரும்பாய் இனிக்கும் சொற்கள்
கொண்ட மொழி
திராவிட மொழிகளுள் மூத்த மொழி
தென் பொதிகைத் தென்றல்
தாங்கி வரும் தாலாட்டு மொழி
கம்பன் வளர்த்த
காவிய மொழி
பாரதி வாக்கில்
விந்தை மொழி
இயல் இசை நாடக
முத்தமிழே
குமரியில் கோவில் கொண்ட
அன்னை மொழி
அழகுக்கு முருகன்
முருகன் அழகு
அவன் தந்த
தமிழும் அவனென அழகு
அழகே அழகு
தமிழே அழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-16, 8:50 am)
பார்வை : 552

மேலே