சுவாசிக்கிறேன் உயிரோடு

என் மெய்யில் உறைந்திருக்கும்
என் தமிழ் உயிரே உயிர் மெய்யே
உன்னையே தொழுகிறேன்
தமிழ் மடியிலே வளர்க்கிறேன்

வல்லினமும் இடையினமும்
மெல்லினமும் மெல்லியதாய் படைத்த தமிழே
வஞ்சித்தும் புகழ்கிறாய் இல்லை
புகழ்ந்தும் வஞ்சிக்கிறாய் என் அறிவே
உன்னைப்போல் மொழியும் இல்லை
நீ மொழியும் அழகுக்கு நிகர் ஏதும் இல்லை

ஐந்தடியும் அழகு யாப்பின் விருந்துகள்
நாலடியும் என் மனதின் நாளைய விழுதுகள்
மூன்றடியும் உன் பெயரால் சிந்தடி ஆனாது
இரு அடியும் தாத்தா வள்ளுவனால் சிறப்பானதே

நீயோ புரிந்தும் புரியாத பலருக்கு சிலேடை
சொல் பிரிந்தால் பொருள் தராத இரட்டைக்கிளவி
அடிகளாய் உன்னிடத்தில் வருகிறேன் வெண்பாவாய்
உன்னை கண்டு பாவையும் பா எழுதும் உன் குறும் பாவால்
என் தமிழே வாழ்கிறேன் தமிழோடு
என் தமிழை சுவாசிக்கிறேன் உயிரோடு
========================================
பிரியமுடன்,
J K பாலாஜி,

எழுதியவர் : J K பாலாஜி (9-Oct-16, 4:45 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 196

மேலே