சொல்லழகு
அன்பு ஆசை இன்பம்
ஈகை உண்மை ஊக்கம்
எழில் ஏழிசை ஐயம்
ஒற்றுமை ஓவியம் ஔதாரியம் எஃகு
ஆகிய சொற்கள் அழகு
அன்பு செய்தல் மிக அழகு
ஆசை கொள்ளல் அதினழகு
இன்பம் வந்தால் வாழ்வழகு
ஈகை குணம் நமக்கழகு
உண்மை பேச நாவழகு
ஊக்கம் தந்தால் மொழியழகு
எழில் என்றே சொல்லழகு
ஏழிசையும் செவிக்கழகு
ஐயம் நீக்கல் கவிக்கழகு
ஒற்றுமையே நாட்டு மாந்தருக்கழகு
ஓவியம் காண்பது கண்ணுக்கழகு
ஔதாரியம் எல்லோருக்குமழகு
எஃகு உடல்... வீரனுக்கழகு
தமிழ் என்ற சொல்லழகு
தமிழ் பேசும் மக்களழகு
தமிழ் எழுத்துக்கள் மிக அழகு
தமிழ் கவிதை அழகினழகு
தமிழ் தானே எனக்கழகு
தமிழை விட்டால் எதுவழகு...?