கூடை மலர்கள்

கூடை மலர்கள்

பூக்கள் நிறை பூக்கூடையில்
புது மலர்கள் சிரிக்கிறது
பாக்கள் நிறை மனக்கூடையில்
கவிதைகள் சிரிக்கிறது
நீல வானக் கூடையில் நிலவு சிரிக்கிறது
நெஞ்சக் கூடையில்
உணர்வுப் பூக்கள் சிரிக்கின்றன !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-16, 10:24 am)
Tanglish : koodai malarkal
பார்வை : 87

மேலே