சாலையில் கிடந்த கைக்குட்டைக்கு வெண்பா

An open challenge to Venkatachalam Dharmarajan VP.

While fetching the morning milk from the Aavin milk kiosk a couple of blocks away, I espied this brand new ladies handkerchief in front of my house?

I was intrigued. Was it an invitation from an unknown damsel, who wanted to meet me without the knowledge of my wife? As I do not relish cast-off things, I hurried home brought out my Lumia 535 Mobile and clicked a photograph, for my friend to write a விகற்ப வெண்பா or whatever venba that is suitable, under the caption குட்டை மனிதனுக்கு கைக்குட்டை விடும் தூது! VP.

நண்பருக்கு நான் கொடுத்த வெண்பாக்கள் ..

1.

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

தேவலோக பெண்ணொருத்தி தேடிவந்து மாப்பிளைக்கு
தேன்குடிக்கும் ஆசையிலே தேடிதனை வந்திடுவார்
என்றெண்ணி காலையிலே நூறடி சாலையிலே
குட்டை மனிதனின் புத்திக்கு எட்டிடவே
விட்டாளே கைக்குட்டை தூது

2.

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

எட்டா மலையினிலே சொட்டுகிற தேன்துளிகள்
கிட்டுமென்ற ஆசையிலே நெற்றியிலே பட்டையாய்
வெண்திருநீர் இட்டிருக்கும் கேரளப் பட்டருக்கு
இந்திர லோகத்து பெண்ணொருத்தி வந்திங்கு
விட்டாளோ கைக்குட்டை தூது!

3.

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

காலையில் கண்விழிக்க கண்டதோர் கைக்குட்டை
யாரதை வைத்திருப்பார் என்வீட்டுத் தோட்டத்தில்
தேடிவந்தோர் தேவதை குட்டை மனிதனுக்கு
ஏன்விட்டாள் கைக்குட்டை தூது

4.

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

எதிர்வீட்டு மாடியிலே காயவைத்த கைக்குட்டை
காற்றடிக்கும் வேளையிலே வந்திங்கு வீழ்ந்ததனால்
பால்வாங்கப் போகையிலே வீணாக என்மனதில்
பாலுணர்வைத் தூண்டிய தே

5.

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

யாருக்கோ பெண்ணொருத்தி தூதுவிட்ட கைக்குட்டை
காற்றடிக்கும் வேளையிலே வீழ்ந்திருக்க என்வீட்டில்
பார்த்துவிட்டால் என்மனைவி முன்வந்து வாயாடி
தீர்த்திடுவாள் திட்டி எனை

12-10-2016

எழுதியவர் : (12-Oct-16, 9:44 am)
பார்வை : 83

மேலே