ஹைக்கூ----தொகுப்பு
உன் முகம் பார்த்தேன்
அதில் என் முகம் கண்டேன்
கண்ணாடி...
வீட்டில் சுமங்கலி
பணியில் விதவை
செவிலி...
மண்ணுக்கும் விண்ணுக்கும்
ஒரு புகைவண்டி சேவை
ராக்கெட்...
அவன் அவளை
அவள் இவனை
இவன் வேறொருவளை
முக்கோணகாதல்...?
நீ சொன்ன பொய்
என் விரலில் மை
தேர்தல்...
இருளில் கண்ணும்
காட்சியும் காதல் கொள்கிறது
செவி உதவியுடன்
சினிமா...
இயற்கை சூட்டை தணிக்க
இயற்கை குளிர்பானம்
இளநீர்...
குழந்தைகளுக்கு சிரிப்பு
பெற்றோர்களுக்கு தவிப்பு
விடுமுறை நாட்கள்...
தேவகுழந்தைகளின்
வெள்ளை பஞ்சுமிட்டாய்
வான் மேகம்...