கவிதை 134 எது சிறப்பு
எத்தனைகாலம் வாழ்ந்தோமென்பதில்லை
எப்படி வாழ்ந்தோமென்பதுதான்
எங்கு பிறந்தோமென்பதில்லை
எவ்வாறு வளர்ந்தோமென்பதுதான்
எதை படித்தோமென்பதில்லை
எதற்காக படித்தோமென்பதுதான்
எதனால் வீழ்ந்தோமென்பதில்லை
எங்ஙணம் எழுந்தோமென்பதுதான்
ஏன் நடந்ததென்பதில்லை
எது காரணமென்பதுதான்
எப்படி இணைந்தோமென்பதில்லை
எவ்வாறு அனுசரித்தோமென்பதுதான்
எப்படி வேறுபட்டோமென்பதில்லை
எவ்விதம் ஒன்றுபட்டோமென்பதுதான்
எக்கணம் மடிந்தோமென்பதில்லை
எக்கணமும் நிலைத்தோமென்பதுதான் சிறப்பு

