கலக்கட்டும் இதிலாவது

இடுகாட்டில்
கொட்டிக் கிடந்தன
சாம்பல் குவியலாக !

அழைத்துக் கூறினேன்
அங்கிருந்த காவலாளியை
அப்புறப்படுத்த வேண்டுமென!

அவனும் உரைத்தான்
அவனின் மொழியில்
அதிர்ந்து போனேன் !

இருக்கும் போதுதான்
இவர்களுக்குள் மோதல்
இன்றோ ஒன்றிவிட்டனர் !

கலந்து உள்ளனரிங்கே
களைந்த சாதிவெறியுடன்
கலந்திட்ட நெஞ்சமுடன் !

கலக்கட்டும் இதிலாவது
இறுதியில் இதுதானென்று
காட்டட்டும் வாழ்வென்று !

எரிந்துப் போகின்றன
எலும்பும் தோலும்
எரியாதது சாதிமதம்!

பழனி குமார்
15.10.2016

எழுதியவர் : பழனி குமார் (15-Oct-16, 2:38 pm)
பார்வை : 81

மேலே