மரணம் என்றால்

அடுத்தவர் துயரத்தில்
ஆனந்தம் காணும் அரக்கர்களால்,
மனிதத்தை நித்தமும்
கொல்லும் மாக்களால்,
வெளியுலகிற்கு வெள்ளாடாய்
வேடமிடும் வேட்டைக்காரர்களால்,
தினம் தினம் சாவதால்
மரணம் என்றால்
எனக்கு பயமேயில்லை!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (15-Oct-16, 4:46 pm)
Tanglish : maranam endraal
பார்வை : 187

மேலே