தேர்தல் பற்றி ஒரு நகைச்சுவைக் கவிதை

வீதி வீதியாய்ப் போவாங்க
வீடு வீடாய்ப் போவாங்க
பணம் காசு கொடுப்பாங்க
கடைசியில் ஒட்டு போட
வேண்டும் என்று கை கூப்பி கேப்பாங்க
பதவிக்கு தான் வந்தால்
அது செய்து கொடுப்பதாய், இது செய்து
கொடுப்பதாய் ஏதேதோ கூறுவார்
தேர்தல் முடிந்து பதவிக்கு வந்த பின்னே
தொகுதி பக்கம் தலைக்கு காட்ட மாட்டாங்க
ஏன்னா அதற்க்கு நேரம் எங்க இருக்கும்
இருக்க போவதோ ஐந்து வருடங்கள்
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் "
இது தாங்க பொது தேர்தலின் எதார்த்தம்
இன்று நமது பொன் நாட்டிலே
நாம் முன்னேற்றம் காண்பது எப்போது
ஆண்டவா உனக்கே வெளிச்சம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Oct-16, 3:33 pm)
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே