கன்னத்தில் ஒன்று
காஃபி அருந்தியவாறே
காலையில் தினசரி படித்துக் கொண்டிருந்தேன்
கன்னத்தில் வந்து முத்தமிட்டாள் இல்லாள் என் இனியவள்
தினசரியை விரைந்து விட்டெறிந்தேன்....
பின் ........?
இன்னொரு கன்னத்தையும் காட்டினேன்
இல்லற வாழ்க்கையில் நான் யேசுதாசன் !
----கவின் சாரலன்

