என் அழகு குட்டி செல்லம் சகி

ஒரு நாள் நீ எனக்கு போன் பண்ற சகி.
எடுத்து பேசனது ஒரு ஆண்

பிரபா அக்கா இருக்காங்களானு நீ கேட்ட.

அதுக்கு அந்த பையன்
அம்மா உள்ள rest எடுக்கறாங்க.

என்னாச்சு.

நேத்து நைட் அம்மா என் கைய பிடிச்சிகிட்டு நடந்துகிட்ருந்தாங்க.
உடனே டக்குனு நெஞ்ச பிடிச்சிகிட்டே மயங்கி விழுந்துட்டாங்க.
உடனே ஹாஸ்பிட்டல்ல சேத்துட்டோம்.

என்னன்னமோ சொல்றாங்க
எதுவுமே புரிய மாட்டேங்குது
ICU ல இருக்காங்க.
அம்மாவுக்கு இது 5வது அட்டாக்காம் .எங்க யார் கிட்டயுமே சொல்லல.

ஒன்னும் ஆகாதுப்பா
அம்மா கிட்ட நான் பேசலாமா...

இல்லமா எதுவும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க.

அம்மாக்கு
ஊசி போட்டாங்க
தூங்கிட்டு இருக்காங்க.
எழுந்ததும் பண்றன் மா...

எழுந்ததும் சகி உங்க கிட்ட பேசணும்னு சொன்னானு சொல்லு

ம்ம் கண்டிப்பா சொல்றன் மா.

என்ன பேர் சொன்னிங்க
சகியா...
அம்மா எப்பயும் உங்கள பத்தி தான்
பேசிகிட்ருப்பாங்க...

அம்மா
சகி சகி சொல்லிட்டு இருந்தாங்க.
என் தங்கச்சி பேரும் சகி தான்
அதனால
நான்
என் தங்கச்சிய தான்
பாக்கணும்னு நெனைக்கறாங்கனு நெனச்சன்.

எழுந்ததும் நானே
உங்களுக்கு கால் பண்றன் மா.

அம்மா
அம்மா
டாக்டர்
சீக்கிரம் வாங்க
அம்மா

என்னாச்சு பா..
அம்மாக்கு தூக்கி போடுது மா
டாக்டர்....

கிட்ட வாப்பா...
டாக்டர எல்லாம் போச் சொல்லு
கிட்ட வந்து உட்காரு வா.

சாப்டியா...
அழக்கூடாது
அம்மா உன் பக்கத்ல தான இருக்கன்.

யார் கிட்ட பேசிகிட்ருந்த
சகி னு
ஒரு அம்மா கிட்ட பேசிட்ருந்தன் மா...

வந்திருக்காளா...

இல்ல மா
போன் ல.

உடனே அவளுக்கு போன் பண்ணு.
நான் அவகிட்ட பேசணும்.

சீக்கிரம் பண்ணு.

என்னாச்சு...

அம்மா call போது

குடு குடு குடு...

சகி
எப்படி இருக்க மா...
சாப்டியா...

நானே பேசறன்
நீ பேச மாட்டேங்கிற
பேசு சகி

அக்கா...
உடம்பு எப்படி இருக்குக்கா...

நல்லா இருக்கன்.

உன்ன தான் பாக்கலயேனு
வருத்தமா இருக்கு சகி...

Line ல யே இரு சகி.
எங்கிட்ட பேசிட்டே இரு.
என் குடும்பம் பேசறத கேளு..

கேட்டுட்டே
எங்கூடவே இரு சகி......

ஆமாம் சகி எங்க பா...
சகி அழுது அழுது
இப்ப தான்
என் மடியில தூங்கனாமா...
அதோ சோபால தூங்கறா பாருங்க.

ஹ் ஹ் ஹ்

அம்மா அம்மா என்னாச்சு மா...
ஒன்னுமில்லபா ஒன்னுமில்ல.

சகிய தூக்கிட்டு வாப்பா...
பாத்து பாத்து
பாத்து தூக்கிட்டு வா

என் பக்கத்ல கடத்து...
சகி
என் செல்லம்
என் பட்டு
உம்மா உம்மா
உம்மா......
அம்மா உன்ன விட்டு
எங்கயும் போலடா
உனக்குள்ளேய தான்டா
இருப்பன்
என் தங்கம்.....

கவின்
சகிய நல்லா பாத்துக்கோ

அப்பா எங்க பா....

அப்பா
உங்கள அட்மிட் பண்ணப்ப chair ல உக்காந்தவரு தான்
இன்னும் எழுந்திருக்கல மா.

எவ்ளவோ கூப்டு பாத்துட்டன்
எழுந்திருக்கவே மாட்டேங்குறாரு.

அம்மா கூப்டனு போய் கூப்டு வா.

சகி
சகி

அக்கா
என்னாச்சு கா
சொல்லுங்க.
நான் உன்ன பாக்கறதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல சகி.....
சாவப் போறன்றத நெனச்சு பயம் இல்ல...

சகி
என் மகளே
என் தங்கம்
என் செல்லம்
உன்னை விட்டுட்டு போறனே டா...
(என்று மார்போடு அணைத்துக் கொண்டேன்.
உச்சி முகர்ந்தேன்.
என் மொட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது அழகாய்)
என் கண்ணே
என் பட்டே
என் மகனே
கவின்

ஓடி வந்த மகனை
தூக்கி அருகில் உட்கார வைத்து
அவன் மடியில்
என் தாயுமானவன் மடியில் படுக்க.

கதவை திறந்து மாமா
உள்ளே வர.

மாமா
எங்க நான் கேட்டது.

என்னது மா...
ஆம்புலன்ஸ்ல வரும் போது
சொன்னனே மாமா.

என் உடல் உறுப்புகள தானம் பண்ணனும் அதுக்கு சம்மதித்து ஒரு கடிதம் எழுதிடுங்க என்று...

ஏன் டி
என்ன உயிரோட கொல்ற...
உனக்கு என்ன தான் வயசாச்சு
சாகற வயசா இது...
அல்பாயிசுல உன்ன அள்ளிக் குடுக்கவா அணுஅணுவா காதலிச்சன்...

கவின் க்கு என்ன வயசு ?

10

சகிக்கு ??
7

எப்படி உனக்கு மனசு வந்தது விட்டுப் போக டி.

மாமா
நான் என்ன வேண்டும் என்றேவா போகிறேன்.
என் பிள்ளைகளை
எப்படி மாமா என்னால் விட்டுப் போக முடியும்.

என் கதை முடியப் போகிறது என்று என்னால் உணர முடிகிறது மாமா...
என் சகியை என்னால் மார்போடு அணைத்துக் கொள்ள இயலவில்லை.
உங்களோடு பேசக் கூட இயலவில்லை மாமா...

மாமா மாமா
என்னடி
வலிக்கிறது மாமா...

என்னோடு
எழுந்து வாடி
வீட்டுக்கு போலாம்.

எழுந்திருக்கவே முடியல மாமா.

நான் உன்ன தூக்கிட்டு போறன் டி.

தூக்கிட்டு தான் மாமா போகப் போறீங்க.

என்ன சொன்ன
ஒன்னும் இல்ல மாமா

சீக்கிரம் கடிதம் எழுதுங்க.

போ டி.

எனக்காக எழுத மாட்டீங்களா...

எழுதிவிட்டேன்.
கையெழுத்து போடுங்க மாமா.
கொடுங்கள் நானும் கையெழுத்து போடுகிறேன். போட்டு விட்டேன்.
டாக்டர் வந்தா கொடுத்திடுங்க.

மாமா
இன்னும் ஒன்று...

என்ன டி.

நான் ரத்தம் தரவேண்டும்.

உளர்றயா நீ...
நீ எந்த நிலைமையில இருக்க.

அதனால தான் மாமா சொல்றன்.
எங்கிட்ட நேரம் இல்ல .
சீக்கிரமா கொடுத்திடணும்.
மண்ணுக்கு போயி மக்கற உடம்பு தானே மாமா....

உடலில் இருந்து ரத்தத்தை
எடுக்கும் தருணம்
மாமா
வலிக்கவில்லையே
வலிக்கவில்லையே என்று ஆயிரம் முறை கேட்டிருப்பார்.

இல்லை மாமா
வலிக்கவே இல்லை...

மாமா
மாமா
மாமா

என்னடி
மூச்சு விட முடியல மாமா
என் தலை மாட்டில் வந்து உட்காருங்கள்.
படுக்கையில் இடது புறம் என் மகளும்
வலது புறமும் மகனுமாய்
உறங்க
இருவரையும் மார்போடு ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டே இருக்க

மாமனின் மடியில்
மாமன் கரத்தை பிடித்துக் கொண்டு
மகளை மார்பின் மீது போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே

மனம் நிறைய
என் தங்கை சகியை
சகி சகி என்றழைத்தபடி
என் சகியோடு பேசியபடி
என் மாமன் மடியில் கண்மூடினேன்...........
என் சகியை பார்த்து கொண்டிருக்கிறேன்...
அருகில் இருந்து
இப்பொழுது
ஆனால் அவளுக்கு தெரியாது...
நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் சகி.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 7:45 am)
பார்வை : 340

மேலே