தீப ஒளித் திருநாள்
தீபங்கள் ஒளிரட்டும்
புன்னகை மலரட்டும்
நெஞ்சங்கள் சேரட்டும்
நன்மைகள் நடக்கட்டும்
துன்பங்கள் விலகட்டும்
சோகங்கள் கரையட்டும்
உறவுகள் கூடட்டும்
ஒற்றுமை பெருகட்டும்
மகிழ்ச்சிகள் பொங்கட்டும்
வறுமைகள் ஒழியட்டும்
புதுமைகள் பிறக்கட்டும்
வளமைகள் செழிக்கட்டும்
நல்லெண்ணம் எனும்
நல்லெண்ணெய் தேய்த்து
அகத்தை தூய்மையாக்கி
குளித்து
புத்தாட்டை அணிந்து
புதிதாக பிறந்திடுங்கள்
இனிப்பாக வாழ்க்கை மாறட்டும்
ஒளியாக வாழ்க்கை ஒளிரட்டும்
புதிதாக மனிதன் பிறக்கட்டும்..........
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்......
* தமிழ் திருநாள் இல்லை என்றாலும் உலக மக்கள் எல்லோருக்கும் சொல்கிறேன் .
நான் உங்கள் தோழி
பிரபாவதி வீரமுத்து