சொல்லாமல் போனவளே
விட்டு போவது நீயா பெண்ணே? எந்தன்
விழியில் வழிவது நீரா கண்ணே?
விட்டு போவது நீதான் என்றால்
என் விழியில் வழிவது உதிரம் தானே!
♦
தவற விட்டது நானா அழகே?என்னை
உதறி விட்டது நீயா மொழியே?
உதறிவிட்டது நீதான் என்றால்
என்னை கொன்று போவதும் சரிதானே!
♦
கொஞ்சம் கொஞ்சம் குறையுதடி -என்
இதயத் துடிப்பு குறையுதடி!
அஞ்சல் அஞ்சல் வருகுதடி -தொலைவில்
மரண அஞ்சல் வருகுதடி!
♦
என் நெஞ்சே இங்கு எரிகிறதே-அதில்
உன் நினவுகள் மட்டும் எரியலையே!
என் இரவின் நேரம் உறைகிறதே - அதில்
உன் கனவுகள் மட்டும் உறையலையே!
♦
கடலை விடவும் கண்ணீர் கூடும் - உன்
பிரிவின் நீளம் நீண்டு இருந்தால்!
காற்றில் முழுதும் என்ஆவி சேரும் - உன்
பிரிவு நிரந்தரம் என்று அறிந்தால்