அக்கர சுதகம்
அக்கரசுதகம் என்பது சித்திரக் கவிகளுள் ஒன்று.
1)
மஞ்சளுரு கொண்டெழுந்து மந்திரத்தில் வந்ததுமார் ?
கொஞ்சும் சிலம்பினிலே கோவலனார் ? - அஞ்சுமனத்
தேயகழ்ந் துள்ளவனார் ? தேடியுரை ! நல்விடைவி
நாயகன் நாயகன கன் !
மஞ்சளுரு கொண்டெழுந்து மந்திரத்தில் வந்தது = விநாயகன்
கொஞ்சும் சிலம்பில் கோவலன் = நாயகன்
அஞ்சும் மனத்தே அகழ்ந்து உள்ளவன் = அகன்
2)
நன்றியுடை நல்விலங்காம் நாய்காட்டும் பண்புமெது ?
இன்றெதில்லை யென்றா லிறந்திடுவோம் ? - மென்னி
ரவாக்கே சரியில் அவாவரலேன் ? சொல்வி
சுவாசம் சுவாசம்வா சம் !
நன்றியுடை நல்விலங்காம் நாய்காட்டும் பண்பு = விசுவாசம்
இன்றெதில்லை என்றால் இறந்திடுவோம் = சுவாசம்
மென் இரவாக் கேசரியில் ஆசை வருவது = வாசம்
-விவேக்பாரதி