வேண்டியதும் வேண்டாததும்

விண்மீறும் புகழெனக்கு வேண்டிய தில்லை - யாப்பில்
. வித்தகனே என்னும்பேர் வேண்டிய தில்லை !
மண்மேலே பாராட்டும் வேண்டிய யில்லை - என்றன்
. மண்டைகணம் சேர்ப்பவையும் வேண்டிய தில்லை !
உண்மையிலே சக்தியருள் வேணுமே ஐயா - அந்த
. உமையவளின் சிலம்பாகப் பிறப்பு வேண்டும் !
அண்டங்கள் ஆள்பவளின் அருளே வேண்டும் - பின்னர்
. அகிலத்தைப் பாடவலி எய்த லாமே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (28-Oct-16, 4:15 pm)
பார்வை : 84

மேலே