காதல் நிசப்தத்தின் எதிரொலி
ஞாபகங்களை
அழிக்கின்றாய்..
நியாயங்களை
நினைவு படுத்தியே...
நினைவுகளை
சுமக்கிறேன்...
சுமப்பதைப்போல்
சுகம் கிட்டோமோ, வென..
காதல் எனக்குள்
கருத்தரித்து
காலமெல்லாம்
கர்ப்பிணியாய்
காத்திருப்பேன்,
விடாமல்
அடை காப்பேன்
உன் நினைவுகளை...
விம்மினாலும்
தும்மினாலும்
கம்மென்று தான் கிடப்பேன்,
உன்னால்...
உன்னாலேயே...
உனக்காகவே....