து துதூthoooo

*
பிரிகிறோம் நிரந்தரமாக,
பயணிக்கிறோம் எதிர்த்திசையில்..
*
எல்லாமே கடந்து போகும்
என்றாய்...

மறந்துபோகும் என்பதை...
சொல்ல முடியாமல்....
*
"சற்றுமுன் கிளம்பிய ரயில்
பிளாட்பாரத்தில் நின்றிருந்தவரை
எத்தனை சத்தம் கூச்சல் குழப்பம்
படபடப்பு பரிதவிப்பு பரபரப்பு"
- அது போல இருந்தது
எனக்குள் காதல்.
*
நீ என்னை விட்டு சென்றதும்
அனாதையாக நான் அந்த பிளாட்பாரமாய்...
அரவமோ சப்தமோ எவ்வித நடமாட்டமோ இல்லாமல்..
*
மனதுக்குள்
சோகம் அடைமழையாய்
நான் ஒரு தனித்தீவாய்....
*
கண்ணிழந்து காலிழந்து
சுரமிழந்து சுவையிழந்து
எனை இழந்து உனை இழந்து
வினை இழந்து விடை இழந்து...

து. து..தூ....thoooo...

எழுதியவர் : செல்வமணி (28-Oct-16, 10:47 pm)
பார்வை : 384

மேலே