காதலுக்கு சூழ்நிலை-அன்றும் ,இன்றும்

அன்று காதலர்கள்
கூடி குலாவியது
கோல மயிலும்
கொஞ்சும் கிளியும்
பாடும் குயிலும்
வசித்த சோலைகள்
மற்றும் தேனருவி
போர்த்த மலைச்சாரலில்
இயற்கையின் சுக வாசத்தில்


இன்று காதலர்
கூடி குலாவ
பஸ் ஸ்டாப்புகள்
காபி கிளப்புகள்
இல்லை பொது பூங்காக்கள்
இருக்கவே இருக்கு
மெரினா, எலியட் கடற்கரை
தனிமை, இயற்க்கை
இரண்டும் இல்லா
இவ்விடங்களில்
மலரும் காதலில்
இயற்கையின் அரவணைப்பில்லை
தனிமை இல்லை
இயற்கையை தேடி அலைய
இக்காதலற்கு neram இல்லை
பண வசதி இல்லை

காதலுக்கென்றே தனி இடம் உண்டு
நேரம் உண்டு
இன்றைய அவசர உலகத்திலே
இவை எல்லாம் நேற்றைய சிந்தனைகள் !

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (30-Oct-16, 10:14 am)
பார்வை : 77

மேலே