நீ நான் நிலா...
பரந்த ஒளிக்கதிர்களை
மேற்கு வானில் அடக்கி.....
சூரியன் மறைகின்ற நேரமதில்
இருளோ மெதுவாய் மூடிக்கொள்கிறது பூமியை.....!
நானோ உன் கைகளைக் கோர்க்க
நீயோ என்னை அணைக்க
நீண்டதூரம் நடந்தோம் நம்மை மறந்தவர்களாய்...!
எங்கு நோக்கினும் இருளே.....
நடு வானிலே சிரித்துக் கொண்டிருந்தாள் வட்ட வடிவுள்ள
வெண்நிற தேவதை நிலா.....!
என்னவனோ காதல்
விளையாட்டை ஆரம்பிக்க......
நானோ வெட்கத்தில் நெளிய இணைந்தோம் வெகுநேரம் நாம்
இடைவெளிகள் அற்றவர்களாய்.......!
இளந்தென்றல் இனிமையாக வீசவும்....
விழித்தெழுந்தோம் நாம் நிறைந்த மகிழ்ச்சியுடனே.....!
யாருமற்ற அரங்கில் அரங்கேறியது நம் காதல் லீலைகள்.....
அங்கிருந்தது நீயும் நானும் நம் காதல் சாட்சியாய் நிலாவும் மட்டுமே.!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.