மனதை தட்டி தட்டி வா
குட்டி குட்டி அணிலே
குதி குதித்தேன் ஓடுகிறாய்? - மனம்
சில்லு சில்லாய் உடைந்து
பட படஎன விழுகிறதே!
பட்டு பட்டு மயிலே
விறு விறுஏன் ஒளிகின்றாய்? - கண்கள்
தட்டி தட்டி இமைக்கை
விட்டு விட்டு வலிக்கிறதே!
சுடச் சுடத் தீயே
சட்டு சட்டு எரிகின்றாய்! - உன்னை
தொட்டு தொட்டு திரிந்து
குளுகுளு நீர் எரிகிறதே!
சுட்டு பட்ட மீனே
சட்டிக்குள்ள நீ கிடக்கின்றாய்! - உன்னில்
விட்டு போன காதல்
முட்டி முட்டி முளைக்கிறதா?
கட்டிக் கட்டி பனியே
கட்டில் மேல் உருகின்றாய்! -நாம்
கட்டிக் காத்த காதல்
உன் வீட்டினில் தெரிந்ததாலா?
சட்டு சட்டு மழையே
சர் சர்ஏன் அழுகின்றாய்! - என்
லப்பு டப்பு இதயம்
விட்டு விட்டு துடிக்கிறதே!
தொடு தொடு முகிலே
துறு துறுஏன் ஓடுகிறாய் ? -நம்
குட்டி குட்டி காதல்
வட்டி வட்டி போடுகிறதே!
லட்டு லட்டு குயிலே
எட்டி எட்டிஏன் போகின்றாய்! - நம்
சுட்டி சுட்டி காதல்
சொல்லி சொல்லி ஜெய்க்குமே!
வட்ட வட்ட பூவே
மனதை தட்டிதட்டி வருவாயா? - நாம்
பண்ணி பண்ணி ரசித்த
பழபழ காதல் இருக்கிறதே!