தீபாவளிக் கொண்டாட்டம்

தீபாவளிக் கொண்டாட்டம்

திரையை விலக்கி அதிகாலையில் சூரியன் எழுந்து வரும் வேளை
நீராடி புத்தாடை அணிந்து
இனிப்புகள் உண்டு
பட்டாசுகளை வெடிக்க வைத்து
கொண்டாடுகின்றனர் தமிழ் மக்கள் மகிழ்வுடனே தீப ஒளித்திருநாளை....!

துன்பங்கள் விலகி
வாழ்வில் இன்பங்கள் பெருக
வீறு நடையுடன்
எழுந்து வந்தது தீபாவளி...!

இருளை நீக்க
வீட்டை பிரகாசமாக்க
வரிசையாய் விளக்குகளை
அடுக்கி விளக்கேற்றி
எரித்து விடவேண்டும்
மனதில் உள்ள அகங்காரம் கோபம் பொறாமை குணங்களை...!

உணவுகளை பகிர்ந்து
ஏழைகளுக்கு உதவி
நற்செயல்கள் செய்து
தீபாவளித் திருநாளை
மாற்றிடுவோம் இனிய நாளாய்.....!

எழுதியவர் : சி.பிருந்தா (31-Oct-16, 12:16 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 72

மேலே