வெறுமை

வெறுமை

அவனுக்கிது நடந்திருக்க வேண்டாம்
அவனின் இறுதி ஊர்வலத்தில்
பாடை பக்கங்களின் ஒரு பக்கத்தை
அவனே சுமத்திருக்கும்படியான நிலை ....
அவனுக்கது நடந்திருக்க வேண்டாம் .

சித்திர குப்தனின் பாவப் புத்தகங்களில்
பக்கங்களை பங்கிட்டதில்
அவனுக்கென்று ஒருபக்கம்
அதிகமாக அளித்து விட்டான் .
அரூபமாகி அவனின் சவத்தை
அவனே சுமந்து வந்ததை
என்னைப் போல் நீங்களும்தான் நம்பவில்லை .

முன்னர் முற்றத்தில்
வெறுமையென்று வாதிட்டபோது
எல்லாமே இருக்கிறதென்று
சொன்னவன் அவனே .

-சகடமிருந்து போன முற்றத்தை
சைக்கிள் வண்டி நிரப்பியது போலவும் -
சைக்கிள் வண்டி போன வெறுமையில்
பைக்கும் நாற்கால் சக்கர வாகனங்கள்
நிரப்பியது போலவும்-

-அன்னம் விடு தூது காலத்தில்
அலைபேசியும் தொலைபேசியும் காணவில்லை .
இனிவரும் காலத்தில்
இன்னொன்று வரலாம்
இப்போது அது இல்லாமல் இருக்கலாம்
இல்லாமல் இருப்பதனால்
இல்லையென்று அர்த்தமில்லை -

முடிவுரையாக முற்றத்தில்
வெறுமையென்ற ஒன்று
முக்காலத்திலுமில்லை .
மேனி சகடத்தில் மொய்க்கும்
கிருமி பூச்சிகளை
பூதக்கண்ணாடியில் பார்க்கும்
பார்வையற்ற நமக்கு
பார்ப்பதெல்லாம் வெறுமையே.

இது- முற்றத்துக்கு மட்டுமில்லை
முழுவதற்குமாக
அகத்துக்குள் உறங்கும் அகனை எழுப்புவோமாக -
அவரே அறிவார்
ஆற்றலையும் -
காற்றில் அலையும் காற்றலையும்

சுசீந்திரன் .

எழுதியவர் : சுசீந்திரன். (2016) (31-Oct-16, 1:22 pm)
Tanglish : verumai
பார்வை : 118

மேலே