காதல் தந்த வலிவழி
நித்தம்
உன் நினைவுகளை
சுமந்ததால்
இன்று என்மனம்
அலைகிறது
தெரு நாயாய்,
பார்த்துப்பார்த்து
ரசித்த
என் வாழ்க்கை
இன்று பாலாய்
போனதேனோ,
பால் வடியும்
இந்த பூமுகத்தில்
திராவகத்தை
தெளித்ததேனோ?
என்னை பேசிபேசி
கொன்றவள்
இன்று பேசாமல்
புதைத்ததேனோ?
நடமாட உயிர் இருக்கு
வெறும் ஊண்சுமந்த
உடல் இருக்கு
மனம் மட்டும் போன
மாயம் எங்கே?
காதல் சுகமான
வேதனைகளை தந்து
என் மனதை காவுவாங்கி சென்றதேனோ?
என்ன தான்
நான் செய்ய
என்னவள் இருந்த
நெஞ்ச,
நஞ்சு கொண்டு
நனைத்திடுதே
நாளும் உன்
நினைவுகளை,
என் மனம் அறியாக்
காதல் கொண்டு
இன்னும் அலையாய்
அலைகிறது,
விளக்கு இருந்தும்
குருடானேன்
விட்டில் பூச்சி
வாழ்வானேன்,
எட்டாக்கனி என்றும்
என்னி என்னி
தவம் இருந்தேன்,
ஈரம் கொண்ட
இதயத்திலே
எரிதலலை
பாச்சுகிறாய்,
பஞ்சு கொண்டு
பூமுகத்தை
பத்தி எரிக்கின்றாய்,
கதறி அழுவதற்க்கு
கண்ணில் நீரில்லை
காலங்கள் கடந்தும்
பயனில்லை,
ரனம் கொண்ட
என் இதயம் உன்
நினைவுகளை சுமந்து ஊனமானதே......
கண்ணீர் துளிகளுடன்
கலங்கிய இதயம்.