சூட்ட கெளப்புறா
ஓட்டபோட்ட உளுத்தன்வட
ஏன் பாட்டகேட்டு சும்மா கட
தட்டிப்போட்டு மசால் வட
குட்டி நமக்கு என்ன மொற
சுருட்டிப்போட்ட பாய்போல
சுருண்டு கேட்டாக்குறா
சூடு ஏத்தும் பார்வையாலே
சூட்ட கெளப்புறா ( ஓட்ட )
தூக்கம் வரல ஒன்னால
பீபீ எருது தன்னால
பைத்தியம் பிடிக்குது பொண்ணால
பாக்குறவன் அடிப்பான் கல்லால
பாடா நீயும் படுத்திரியே
ஆவின் பாலாபாக்கெட்டில் அடைக்கிரியே
துனியா என்ன தொவைக்கிறியே
காயவெச்சு மடிக்கிறியே
சொட்டு நீலம்போல என்ன
தொவச்சி பாக்குறா
சாயம் போன பின்னே என்ன
தூக்கி ஊத்துறா ( ஓட்ட )
ஊசியில் நுழைஞ்ச நூலட்டும்
ஈஸியா மனசில் நுழைஞ்சவளே
ஆயுள்ள வெந்த வடையட்டும்
ஆயுளை பாதியா கொறைச்சவளே
மிக்ஸியா ஒன்ன சுத்துறண்டி
என்ன ஒதறி தள்ளி போகாதடி
ஸ்டெத்தோஸ்கோப்புபோல
மனச தொட்டுபாக்குறன்
ஒன்இதய துடிக்கும் துடிப்புலதான்
நானும் இருக்கிறேன் ( ஓட்ட )