சந்தானமும் சந்தனமும்

“சந்தனப் பொட்டுக்காரா கோணங்கிக் கிராப்புக்காரா…” என்ற பழயை பாடலை வானொலிப்பெட்டியில் இரசித்தவாறு அவன் தனிமையில் அந்த உயர்;ந்த பூத்து குலுங்கிய மரத்துக்கடியில் வந்தமர்ந்தான். மரத்திலிருந்து வீசிய நறுமணம் அவன் மூக்கைத் துளைத்தது. எங்கிருந்து அந்த நறுமணம் வருகிறது என்று கண்டுபிடிக்க அவன் சுற்றுமுற்றும் பார்த்தாhன். “ யாராவது சந்தனக் குச்சியை எரிக்கிறார்களோ என யோசித்தான். அப்படி இருக்காதே. இங்கு என்னையும் இந்த மரத்தையும் தவிர வேறு ஒருவருமில்லையே. அப்படியிருந்தும் இந்த நறுமணம் மூக்கைத் துளைக்கிறதே. யோசனையில் தலையைச் சொறிந்தான். வாசனையை உள்ளேயிழுத்து கண்களை மூடி சுவாசித்தான். யாரோ சிரிப்பது போன்று ஒரு பிரமை.

“ என்ன எங்கிருந்து இந்த நறுமணம் வருகிறது என யோசிக்கிறாயா?. குரல் ஒன்று கேட்டது.

“ யார் பேசுகிறது?.”

“நான் தான் மரம் பேசுகிறேன்.”

“புதுமையாக இருக்கிறதே “

“புதுமையில்லை. அந்த மணம் என் உடம்பிலிருந்து தான் வருகிறது”

“நீ சொல்வது உண்மையானால் இந்த நறுமணத்தை வீசும் நீ யார்.?”

“ என் பெயர் நீ கேட்டுக்கொண்டிருக்கும் பாடலில் மறைந்திருக்கிறது.”
அவன் சற்று சிந்தித்தான்.

“ ஓ நீ சந்தன மரமா. என் பெயருக்கும் உன் பெயருக்கும் நல்ல பொருத்தம் என்று சொல்”

“ அது எப்படி?” மரம் கேட்டது

“ என்பெயர் சந்தானம். உன் பெயர் சந்தனம். ஒரு அரவு தான் எங்களை பிரிக்கிறது.”

“ வேடிக்கையாக இருக்கிறதே. அப்போ உன்னை நான் தம்பி என்று அழைக்கலாமா?”

“ அதுக்கென்ன அண்ணா”

“அது சரி தம்பி உன் நெற்றியில் சந்தனப் பொட்டு இருக்கிறதே. கோயிலுக்குப் போய் வந்தாயா?”

“எனது நண்பனின் திருமணத்துக்குப் போய் வந்தேன். அது சரி நீ சந்தன வீரப்பனின் காதலியா?” சிரித்தபடி அவன் கேட்டான்.

“ அவன் பெயரை உச்சரிக்காதே. எனக்கு படு கோபம் வரும். எங்களை பிறருக்கு விற்று பணம் சம்பாதிக்கும் வியாபரி அவன். எங்களின் புனிதமும் அருமையும் அவனுக்கு தெரியவாப்போகுது?. இயற்கையில் எங்களைப் போன்று விலைமதிக்க முடியாத பொருட்கள் எத்தனையோ இருக்கிறது. கருங்காலி மரம், யானைத் தந்தம், மயில் இறகு, புலி, மான் முதலைத் தோல்கள், வைரக்கற்கள், முத்துக்கள் , பவளம் தங்கம் , வெள்ளி. இரும்பு போன்ற உலோகங்கள் இப்படி கணக்கில் அடங்காதவை எத்தனையோ. இதையெல்லாம் மனிதர்கள் விட்டுவைப்பது கிடையாது. எவ்வளவுக்கு இயற்கை அன்னையை கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவுக்கு கொள்ளையடித்து பணம் சேர்க்கிறார்கள்.”

“ அதேன் உனக்கு கோயில்களில் அவ்வளவுக்கு மதிப்பு?”

“ கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே என் அருமையையும் வாசனையையும் வேத கால மக்கள் அறிந்திருந்தனர். இராஜாக்கள், சுல்தான்கள்>; ரிஷிமார்> பொளத்த பிக்குமார் என்னை பாவித்தனர். தங்கம் , வெள்ளி> யானைத் தந்தம் போன்றவைக்கு ஈடாக என் மதிப்பிருந்தது. என் நறுமணத்தில் தியானம் செய்தால் மனதை சாந்தப்படுத்தி ஒரு நிலை படுத்துவது இலகுவாகும். விழிப்புணர்வை தூண்டவைக்கும். மனோ வியாதிகளைத் தீர்க்கவும் என்னை பயன் படுத்தினார்கள்.”

“அதேன் நெற்றியில் உன் பசையை பொட்டாக வைக்கிறார்கள”.

“மனிதர்களுக்கு உடம்பில் ஏழு சக்கராக்கள் உண்டு. இவையூடாக உடம்பு சக்தியை உள்ளடக்கு;கிறது. நெற்றியில் இருப்பது ஆறாவது சக்கரா. முக்கண்ணன் சிவனின் நெற்றிக் கண் ஆறாவது சக்கராவைக் குறிக்கும். இந்த சக்கரா உள்ள இடத்தில் என்பசையினால் திலகமிட்டால் மூளைச் சுரப்பியை திறம்பட இயங்கச்செய்து சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குகிறது. அதனால் தான் ஆயுர் வேதம் என் பசையை பாவிக்கும் படி பரிந்துரைக்கிறது”

“ஓகோ அதுவா காரணம். சிலர் கைகளிலும் உடம்பு முழுவதும் சந்தனம் பூசுகிறார்களே அது எதற்காக?”

“மனிதர்களின் தோலில் நீர் நீங்குவதால் பல விதமான தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் உருவாக ஏதுவாகிறது. அது மட்டுமல்ல வியர்வையினால் உடம்பில் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. என்னை உடம்பில் பூசுவதினால் தோல் ஈரமாக்கப் படுகிறது. துர்நாற்றம் நீங்குகிறது. சூரியனின் கதிர்களினால் தோல் சம்பந்தப்பட்ட புற்று நோய்வராமல் தடுக்கிறது.

“ உனது மருத்துவத் தன்மையை கேட்க அதிசயமாக இருக்கிறது . இந்தியாவில் மட்டுமா உனக்கு மதிப்புண்டு ?” சந்தானம் கேட்டான்.

“யார் சொன்னது ?. பண்டைய எகிப்தியர்கள் என்னை இறக்குமதி செய்து மருத்துவத்துக்கும், கிரிகைகளுக்கும் பாவித்தார்கள். சோர்வு, மனக்கவலை உறக்கமின்மை , மூச்சு சம்பந்தப்பட்ட வியாதிகளை போக்கவும் என்னை பாவித்தனர். ஏன் கிளியோபத்திரா என்ற எகிப்திய அழகி கூட என்னை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வாசனைத் திரவியமாக குளிக்கும் போது பாவித்தாள். சொலமன் என்ற அரசனின் கல்லறையில் கூட எனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இலங்கை, இந்தியா இந்தோனேசியா, வியட்நாம், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சந்தன மரங்களை வளர்த்து எண்ணை எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள். வாசனைத்திரவியமாக பல நாடுகளில் விலை போகிறேன். எனது மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சிலைகள் , உருண்ட மணி மாலைகளுக்கு வெளிநாடுகளில் தனி மதிப்புண்டு.”

“அடேயப்பா உன் இனத்துக்கு இவ்வளவு மதிப்பா? அது சரி இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறாயே உன் வயதென்ன?”

“ எனக்கு இப்போது அறுபது வயதாகிறது. நான் முதுமையடைய கிட்டத்தட்ட அறுபதிலிருந்து எண்பது வருடங்கள் எடுக்கும். இப்போ என் உயரம் இருபத்தைந்தடி. என் வளர்ச்சி விரைவானதல்ல. அரசாங்கம் சட்டத்தின் மூலம் எங்களுக்கு பாதுகாப்பு தருகிறது. கர்நாடகாவில் உள்ள வீட்டு வளவுக்குள் ஒரு சந்தன மரம் இருந்தால் அது அரசின் உடமை. நன்றாக முற்றிய மரங்களைத் தான் தறிக்கலாம் என்கிறது சட்டம். எங்களை கூடுதலாக மைசூர் பகுதியில் காணலாம். 1792ல் மைசூரில் எங்களை அரச மரமாக பிரகனப்படுத்தி கௌரவித்தார்கள்;.”

“ அடேயப்பா அவ்வளவு உன் சந்ததிக்கு மதிப்பிருக்கிறதா?”

“ இல்லாமலா மகாத்மா காந்தி> இந்திராகாந்தி ஆகியோரை தகனம் செய்யும் போது சந்தனக் கட்டைகளைப் போட்டு தான் தீ மூட்டினார்கள். அதிலிருந்து தெரியவில்லையா என்னுடைய புனிதம் எவ்வளவு என்று. கோயில்களிலும் , திருமணம் . திருவிழாக்களிலும் எனக்கு தனி இடமுண்டு. ஏன் உன் முருகன் கோயலில் தினமும் வாசிக்கும் நாதஸ்வர வித்துவானும் அவர் கோஷ்டியும் நாள் தவறாது எனக்கு தங்கள் நெற்றிகளில் தனி இடம் கொடுப்பதைப் பார்த்திருப்பாயே. என் சந்ததிக்கு இந்து> பௌத்தம் > பார்சி > இஸ்லாம்> சீன., ஜப்பானிய மதங்கள் ஆகிய மதங்களிடையே நல்ல மதிப்புண்டு. அவுஸ்திரேலிய பூர்வ குடிமக்கள் எனது காய்களை உணவாக உண்கிறார்கள். “

“ நீ சொல்வதைப் பபாத்தால் மருத்துவத்துக்கு பணனுள்ளவான இருக்கிறாயே”

“ நான் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறன். உங்களில் பல சாதிகள் இருப்பது போல் எங்களில் மூன்று வகையான பேதங்கள் உண்டு...அவற்றில் சிவப்பு நிறச் சந்தனமே மருந்துகளுக்கு உத்தமம். மஞ்சள் நிறம் கொண்டவை மத்திமம். வெள்ளை நிறமுடையது அதமம். எஙகளை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல விவேகம்> மனமகிழ்ச்சி> இலட்சுமி விலாசம்> சருமத்தாது ஒளி> பெண்களிடம் விருப்பம் உண்டாகும். அதுமட்டுமல்ல வாதம்> பித்தம்> கபம் ஆகிய முக்குற்றங்களையும்< சித்தப்பிரமை< நாவறட்சி> உட்சூடு> நமைச்சல் இவைகளையும் போக்கி> உடம்பிற்கு வலுவைக் கொடுப்பேன்”

“என்ன மதிப்பிருந்தும் நீ ஒரு ஒட்டுண்ணிதானே” சந்தானம் சிரித்தபடி கேட்டான்.

“ நான் ஒரு வேர் ஒட்டுண்ணி என்பதை மறுக்கவில்லை. எனக்கு அருகே வளரும் மற்றைய மரங்களின் சத்தினை என் வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து வாழ்கிறேன் , அதனால் அவர்கள் என்னிடமிருக்கும் நறுமணத்தை பெறுகிறார்கள். இது ஒரு கொடுத்து வாங்கும் பரிமாற்று வியாபாரம் என எடுத்துக் கொள்ளேன். என் வேரில் தான் கூடிய அளவு எண்ணையுண்டு. ”

“ மதிப்பும்> மடியில் கனம் உள்ளவனுக்கு எப்போதும் ஆபத்து காத்திருக்கிறது என்பது உண்மை. நீ இங்கு தனியாக இருப்பதை வீரப்பன் போல் ஒருவன் கண்டால் உன் உயிருக்கு ஆபத்து. அதனால் வன இலாக்காவுக்கு அறிவித்து நான் உனக்கு பாதுகாப்பு தரப்போகிறேன். “

“ நன்றி தம்பி. நீ எப்போதும் கோயிலுக்கு போய் ஐயர் கொடுக்கும் சந்தனத்தை நெற்றியில் வைக்கும் போது என்னை மறந்து விடாதே. என்ன?”

“ நிட்சயமாக மறக்கமாட்டேன். நேரமாச்சு நான் வருகிறேன்” சந்தானம் சந்தன மரத்திலிருந்து விடைபெற்றான்.

******

எழுதியவர் : ( பொன் குலேந்திரன் –கனடா) (2-Nov-16, 12:08 am)
பார்வை : 410

மேலே