கிராமத்து காதல்

நா உனக்காக பொறந்தவன்னு
சொல்லி வளத்தாங்க
என் நெஞ்சுல
ஆசைய வளத்தாங்க

பெரியாவுக சண்டையில
நம்ம பிரிச்சி வச்சாங்க
தலைவிதி மாறுமான்னு
மறக்க சொன்னாங்க

உன்ன பாக்கக்கூடாதுன்னு
அடிச்சி பாத்தாங்க
பள்ளிக்கூடம் போறதுக்கும்
தட விதிச்சாங்க

என் பாசத்துக்கு
வேலி வச்சாங்க
குத்திவச்ச பச்சையக்கூட
சுட்டு வச்சாங்க

உன்ன பார்த்த
போதும் மாமா
இந்த உசுரு
எனக்கு வேணா

நீ சொன்ன
போதும் மாமா
எந்த சொந்தமும்
எனக்கு வேணா

உன்ன சேர்ந்த
போதும் மாமா
வேற சொர்கம்
எனக்கு வேணா

ஜெகன் ரா தி

எழுதியவர் : ஜெகன் ரா தி (2-Nov-16, 8:53 am)
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 220

மேலே