காதலிக்க தைரியம் மட்டும் போதுமா
ஒரு இளம் பெண் இரவு 12 மணி போல தன் காதலனுடன் ஊரை விட்டு ஓடிபோக இரயில் நிலையத்தில் அவனுக்காக காத்திருக்கிறாள். எல்லோரும் அவளை சந்தேகமாக பார்க்க காதலன் வந்தவுடன் எனக்கு பயமாக இருக்கிறது. என்கிறாள்.
நான்தான் உன்னுடன் இருக்கிறேனே...!!! நாம் சென்னைக்கு தான் செல்கிறோம். அங்கு என் நன்பர்களின் மூலமாக பதிவு திருமணம் செய்துக்கொள்வோம் என்று அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு இருவரும் இரயில் ஏறுகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கொஞ்சி பேசிக் கொண்ட இருவரும் கல்யாண கனவில் காதலி அப்படியே உறங்கிவிடுகிறாள். திடீரென அவளுக்கு முழிப்பு வர அருகில் இருந்த காதலனை காணவில்லை பயந்து போனவள் காதலனின் பெயரை சொல்லி பதற்றத்துடன் இரயில் இங்கும் அங்குமாய் தேடுகிறாள்.
இருவர் குடி போதையில் காதலனை வேண்டும் என்றே வம்பிலுக்க வாய்ச்சண்டை கைகலப்பில் ஆரம்பித்தது. தன் காதலனை யாரோ இருவர் அடிப்பதை பார்த்தவள் வேகமாக ஓடிவந்து அவர்களை தடுக்க அப்போது அவள் தாவணி லேசாக விளக அந்த இருவரில் ஒருவன் அவளை கற்பழிக்க முயற்சிக்கிறான்.
என்ன செய்வது என்று தெரியாதவள் அவன் முகத்தில் காரி துப்பிவிடுகிறாள். அந்த கொடியவன் கோபம் கொண்டு இவளை ஓடும் இரயிலிருந்து எட்டி உதைத்துவிடுகிறான். இரயிலிருந்து கீழே விளப்போகிறவளை பார்த்த காதலன் வேகமாக எழுந்து காதலி கையை இருக்கி பிடித்து அவனும் கீழே விழுகிறான்.
காதலனுக்கு தலையில் அடிப்பட்டு பயங்கரமாக இரத்தம் சொட்டியது. விழுந்த அதிர்ச்சியில் காதலி. பேச்சு மூச்சின்றி போனாள். அவளை பார்த்த காதலன் பயத்தில் அலறுகிறான். அவளை தூக்கிக்கொண்டு நடுரோட்டில் நிற்க அந்த வழியாக Car.ல் வந்தவர்கள் இவர்களை அவசர அவசரமாக மருத்துவமணைக்கு கொண்டு செல்கின்றனர்.
(விடியற் காலை 4 மணி. மருத்துவமனையில்.)
அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிவிட்டோம்! ஆனால் நினைவு வருமா! வராதா! என்று இப்போது சொல்ல முடியாது. என்கின்றனர் Dr.
மனநொந்து அழுதவன் காதலியின் அருகில் செல்கிறான்.
"நீ ஏண்டி என்னை Love. பன்னே!!! பைத்தியக்காரி! இப்படி செத்துப்போகவா டி! உன் கூட கடைசி வரை இருப்பேன் சொன்னியேடி என் செல்லம்! எந்திரிடா! கண்ணமா! என் தங்கம்!!! என்ன பாருடா!!! நீ இல்லாம நா மட்டும்"....
என்று காதலன் அவளை பார்த்து புளம்ப. அவள் கை கால் லேசாக அசைந்தது. Car.ல் கொண்டுவந்த நன்பர்களும் Dr... இன்னும் இதுபோல பேசுங்கள் என்று சொல்ல உண்மையான காதல் அங்கு உயிர் பெற்றது.
கண் திறந்து தன் காதலனை ஒரு சொட்டு கண்ணீருடன் அவள் பார்க்க வேகமாக அவள் கண்ணீரை துடைத்தவன் உன் கண்ணில் கண்ணீர் வந்தால் என் இதயத்தில் இரத்தம் வரும் என்கிறான்.
((நாம் ஒருவரின் மீது அசைக்க முடியா அளவிற்கு அன்பு வைத்திருந்தால் மரணமே வந்தாலும் நம்மை அவர்களிடம் இருந்து பிரிக்க இயலாது.
இந்த காலகட்டத்தில் ஓடிப்போய் திருமணம் செய்வது என்பது அவ்வளவு சாதாரணமானது கிடையாது. நான் ஒரு பெண்ணை நேசிக்கிறேன் அவள் வீட்டில் பேசி திருமணம் செய்து வைங்கள் என்று சொல்லக்கூட தைரியம் இல்லாதவர்கள்.
வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து அவளை காதலிப்பது மிக மிக நல்லது.))