காதல்
சில்லேன்று காற்று தீண்டுகையில்
சிந்தனையில் உன் முகம்....
காற்றில் உன் வாசம்
மனதில் உன் நேசம் ....
சாளர இருக்கையில்
பேருந்து பயணம் ....
வாழ்வின் இனிமையான
நிமிடம் இது ....
இன்னும் உன் ஞாபகங்களோடு
இந்த சாலை நீண்டு கொண்டே இருக்கிறது ...
புதிதாய் கவி எழுத புறப்பட்ட போதும்
பழைய படி உன் நினைவிலேயே முடிக்கிறேன் ....