முப்போழுதும் உன்னோடு
உன் சதைபற்றிய
கன்னத்துடன்
உரசி இரகசியம்
பேசும் கைபேசியாக
நான்மாற எனக்கு
சின்ன சின்ன ஆசையடி..
உன் மடிமீது தவழ்ந்து
உன் கண்களையும்
கவனத்தையும் தன் பக்கம்
ஈர்க்கும் மடிகணினியாக
நான்மாற எனக்கு
சின்ன சின்ன ஆசையடி..
காதோடுதான் நான் பாடுவேன்
என்று உன் காதுகளில்
காதல்பாடல்களை ஒலிக்கும்
தலையணியாக நான்மாற
எனக்கு சின்ன சின்ன ஆசையடி..
நான் முப்பொழுதும்
உன்னோடும்
உன் நினைவோடும்
வாழவேண்டும்
என்பதே என் நிரந்தரமான
பேராசையடி...

