சிகரம் தொட வாடா நண்பா

சிகரம் தொட வாடா நண்பா
சிறகு கட்டி வாடா நண்பா
ஆழி என்ன ஆழி போடா
ஆழம் தொட்டு பார்ப்போம் வாடா
.
இழுத்து பிடிக்கும் அச்சத்தை
கொழுத்தி போட்டு வாடா
இருக்கும் வாழ்க்கை மிச்சத்திற்கு
இரு சிறகு கொடுப்போம் வாடா
.
முட்டையோட்டு குஞ்சுக்கும்
முட்டி உடைத்தால்தான் வெளிச்சமுண்டு
றெக்கை இரண்டு இருந்தாலும்
பறக்கும் பறவைக்கே வானமுண்டு
.
துளை கண்ட மூங்கில்தான்
சுகம் தரும் இசை பாடும்- நண்பா
வலைப்பின்னி நீயும் கிடந்தால்
வாழ்க்கை எப்படி வசமாகும்
.
வலி கண்ட கற்கள்தானே
வணங்கும் கோவில் சிலையாகும்
வலி கண்ட நெஞ்சம்தானே
வருகின்ற வெற்றிக்கு உரித்தாகும்
.
சிகரம் தொட வாடா நண்பா
சிறகு கட்டி வாடா நண்பா

எழுதியவர் : மணி அமரன் (12-Nov-16, 9:25 am)
பார்வை : 115

மேலே