பிரதமர் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

கருப்பு பணத்தால் தான் விலைவாசி ஏறி ஏழை மக்கள் நுகரும் அத்தியாவசிய தேவைகளிலிருந்து வீடு வாங்க முனைவது வரை அனைத்துமே மிக கடினமாக இருக்கிறது. கருப்பு பணத்தை கொண்டு அங்கங்கே இருக்கும் நிலங்கள், மற்றும் முதலீடுகள் என கருப்பு பண முதலைகள் முதலீடு செய்து பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே போவது, ஏழை என்றுமே ஏழை ஆவது என நிலையை நிரந்தரமாகமாக்கி கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் சந்ததியினர் பரம்பரை பரம்பரையாக உலகம் அழியும் வரை ஆடம்பரமாக வாழ அந்த பணம் அதன் மீதுள்ள முதலீடு உதவுகிறது.மேலும் இந்த கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்கள் தான் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் நூற்றுக்கு ஓட்டு என மக்களை ஏமாற்றி பதவி சுகம் அனுபவித்து ஏழை மக்கள் நல்லவர்களுக்கு ஒட்டு கிடைக்க விடாமல் பதவிகளை வகிக்க விடாமல் செய்கிறார்கள். கருப்பு பண பதுக்கல் என்பது சில ஆண்டு போர்களுக்கு சமமானது.போர் ஏற்படும் காலங்களில் போக்குவரத்து,இணைய சேவைகள், இன்டர்நெட், ATM மற்றும் விவசாயம் என அனைத்தும் இஸ்தம்பிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அது போன்ற சூழ்நிலையாக இந்த சூழ்நிலையை மக்கள் எடுத்து கொண்டு நாட்டை வல்லரசாக்க வழி செய்யப்போகும் இந்த கருப்பு பண ஒழிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

எழுதியவர் : சதிஷ்குமாரன் சிட்லபாக்கம (13-Nov-16, 8:46 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 138

மேலே