எழுத்து.காமே என்றும் முதலிடமே
அறிவு தேடலில் அன்றொருநாள்
அலைந்தே கிடைக்கையில் கணிப்பொறியில்
பொழுது போகவும் புதுசாய் படைக்கவும்
புரியவைத்தது எழுத்து .காமே
இனிப்பு தேடும் எறும்பு போலே
எழுத்துக்குள்ளே ஒவ்வொருநாளும்
கவிதை படிக்க வந்த போதே
கற்று கொண்டது கவிதைகளே
கணிப்பொறியில் கல்வெட்டாய்
காலமாற்றம் செய்ததனால்
சங்கத்தமிழ் வளர்ச்சியினை
சரித்திரத்தில் உயர்த்தவே
புது புது கவிஞர்களும்
புறப்பட்டார்கள் எழுத்தாக
தங்களுக்குள்ளே நண்பர்களாய்
தலைபட்டார்கள் கருத்தாக
எங்கோ படித்த அருஞ்செய்திகள்
எழுத்துக்குள்ளே சேர்க்கவைத்து
படித்ததில் பிடித்ததெல்லாம்
பாருக்கெல்லாம் சேவைசெய்து
அனைத்து தரப்பு நெஞ்சங்களையும்
ஆர்வமுடனே பங்கேற்க வைத்து
தினம் தினம் இது வளரும்போது
தேன் சிந்த கிடைக்குது அறிவினுக்கு
நாளொரு வண்ணம் மேன்மைபடுத்த
நல்லது மட்டுமே கொடுத்து வாழ
பக்கங்கள் பிரித்து பார்வையிடவும்
படிப்போரை என்றும் மகிழ்ச்சி காணவும்
ஆபாச குற்ற நோக்கம் அருவருக்கத்தக்கதை
அதுபோன்றே படங்களில் தெரியவைக்க நினைப்பதும்
குழந்தைகள் பெரியவர்கள் மனநிலை பாதிக்காமல்
குறிப்பாக பல்வேறு உரிமை மீறல் இல்லாமல் இன்னும்
பச்சை கொடிகுள்ளே பறக்கணும் கவிதைகள்
பல பல தவறு இருந்தால் சுட்டிக்காட்டி நீக்கவும்
வழியமைத்து கொடுத்ததனால் வாழ்த்துகிறோம் எழுத்து.காமே
வாக்குகளையும் இடவைத்தாய் வருங்காலத்திலும் நீ முதலிடமே