என்னுள் தோன்றியது

அது ஏன் என்னுள்
இருக்கிறது

அது என்னுள் எதுவாக
இருக்கிறது

அது ஏன் என்னை விளம்பரம்
செய்கிறது

அது ஏன் என்னை வியாபார
படுத்துகிறது

எனக்குள் அது எதுவாக
இருக்கிறது

என்னுள் ஆயிரம்
நீரூற்றை உருவாக்கும்
ஜீவ நதியா அது

அந்த நதிதான் என்னை
சீர்படுத்துகிறதா

இல்லை என்னை அது
இயங்குகிறதா!

நான் என்ன இயங்கும்
இயந்திரமா!

தெரியாமல் திரிகிறேன்
தெரிந்துகொள்ள அலைகிறேன்

அலைந்து திரிந்தபோது
என்னுள் ஒரு நீர்
ஊற்று கிளம்புகிறது

கிளம்பிய நீரூற்று எங்கே
இருக்கிறது

அது எதுவாக
இருக்கிறது

அது இதுதானோ
என்று எனக்குள்
தோன்றிய நினைவுகள்
கனவானபோது தெரிகிறது

யாவும் கனவில் தோன்றிய
கற்பனை என்று...

எழுதியவர் : அன்புடன் பிரசாந்த் (16-Nov-16, 1:44 pm)
Tanglish : ennul THONDRIYATHU
பார்வை : 95

மேலே