அவளும் நானும்

குளு குளு என்ற கிரகத்தில்தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்..
அப்போதெல்லாம் நான் பசியாற உண்பது பனிக்கட்டிகள்தான்..
மாதுளைகள் எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை..

பனிபடரும் ரோஜாக்களை மட்டும் ரசித்து பழகியவன் நான்..
பனிமலர்களை பார்த்திருக்கவில்லை..

ஒரு நாள் நீண்ட பயணம்..
சுட்டெரிக்கும் பனிக்காட்டில் தன்னந்தனியாக..
மாதுளைகளையும்.. பனிமலர்களையும் தேடி..

வழியில் ஒரு தேவதை..
கைகளில் இரண்டு சிவப்பு மாதுளைகளும் கூட..
எனக்கு இரண்டு பருக்கள் போதும் என்றபோதுதான் அவள் பனிமலரானாள்..
இப்படித்தான் அவளும் நானும்..

எழுதியவர் : றிகாஸ் (17-Nov-16, 8:45 pm)
சேர்த்தது : றிகாஸ்
Tanglish : avalum naanum
பார்வை : 161

மேலே