வான வசந்தங்கள்
விமானங்கள் ஒன்றும்
அவ்வளவு உயரத்தில்
பறந்திடவில்லை
விமான பணித்
தேவதைகளின்
உள்ளங்களின்
உயர்வுகளைவிட...
விமான பணித்
தேவதைகளிடம்
கேட்கும்
பொருத்தமில்லா
கேள்விகளுக்கும்
பொருத்தமான பதில்கள்
இவர்களிடமிருந்து
கிடைக்கும்...
வானம் இந்த
பணிப் பெண்களுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்து கொள்ளும்...
வான வசந்தங்கள்
இவர்கள் என்பதில்
மாற்றுக் கருத்து
இல்லையென...
பயணிகளில்
நானும் ஒருவன்
என்பதால்
கருத்துக்கணிப்பு
என்னிடமும் உண்டு
இவர்களைப்பற்றி...
இவர்கள் தங்கள்
உதட்டுச் சாயத்திலும்
கன்னங்களில்
ரோஜா நிறமேற்றலுக்கும்
வில்களுக்குச் சவால் விடும்
புருவங்களை
நேர்த்தி செய்வதிலும்
கார்மேகம் விமானத்திலுள்ளும்
தெரியச் செய்யும்
கேச அழகு சூட்சுமத்திலும்
செலுத்தும் கவனம் அதிகம்...
பயணிகளுக்கு
பணி செய்வதிலோ
இவர்கள்
செலுத்தும் கவனம் மிக அதிகம்...
மிக மிக அதிகம்...
இந்த பூமியில்
வேறெந்தப் பணிக்கும்
இவர்கள் பணி
குறைந்ததில்லை...
😀👍