விழிகளால் என்னை வீசாதே

உனது விழிகள் என்னுடன் பேச விரும்புகிறதா?
என்னைத் தூக்கி வீச விரும்புகிறதா?
நீ என்னைத் தவிர்த்துச் செல்லும்
நேரங்களில் என்னை நான் வெறுக்கின்றேனடி.
எனது பார்வைகள் உனக்கு துன்பம் என்றால்
அதை என்னிடமே சொல்லிவிடு.
உன்னைப் பார்ப்பதை நிறுத்திவிடுகிறேன்.
என்னை வெறுப்பாய்ப் பார்த்து எந்தன்
அழகிய நினைவுகளை வேருடன் அழிக்காதே.
ஒருவேளை நான் உன்னிடம் எனது
உணர்வுகளைப் பேசினால் எந்தன்
கண்ணிலே படமாட்டாயோ என்ற அச்சத்தில்தான்
ஆசையாய் பேசிப் பழகிய உரைகளையெல்லாம்
ஆற்றிலே கலந்த மண்ணைப்போல காற்றிலே கரையவிட்டேன்.
உனக்கு எப்படியும் அவை கேட்கவே கூடாது என்று
தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறேன்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (22-Nov-16, 6:58 pm)
பார்வை : 146

மேலே