தீக்குள் மொட்டு
நியாயங்கள் தோற்க காயங்களோ தோன்றி...
பாதைகளை மாற்றி வாதைகளை உருவாக்கி...
நிலை குலைய வைக்கிறது என்னை
கயவர்கள் நிறைந்த இவ்வுலகம்..!
வெழுத்துப்போன ஒர் வைகறையில்
வாழ்கையின் வாசலில் நிற்கும் நான் கண்களில் ஒளியிழந்து வாழ்க்கையில் விருப்பிழந்து
நிற்கின்றேன் தனிமரமாய்...!
நெஞ்சை வருடும் சம்பவமாய்
அலைமோதுகிறது என் மனதில்
பல மனித மிருகங்களால் நான் சீரழிந்த தருணம்...!
கூச்சல் நிறைந்த உலகில்
முண்டியடிக்கும் கூட்டத்தினிடையே
தளராமல் தடுமாறாமல்
தனித்தே நீச்சல் அடித்தேன் என் பெண்மையை காப்பாற்ற....
கயவர்களின் காம வலையில்
சிக்கிய நானோ...
சில நொடிகளில் கசக்கியெறியப்பட்டு கருகிப்போனேன் தீக்குள் மொட்டாய்!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.
*********************

