காதல் அரங்கேற்றம்

இளஞ்சிவப்பில்
இரு ஜோடிகள்
எதிர்ப்பட்டதோ
இன்னொரு ஜோடி.

அரட்டை அடிக்கையில்
எதிர் எதிரே கச்சேரி.
அரற்றி அமிழ்ந்தால்
மௌனிக்கும் விழிகள்.

விட்டு விட்டால் வம்பிழுக்கும்
விடாமல் கதை பேசும்
கிட்ட கிட்ட வந்து நின்று
தொட்டு தொட்டு தினவெடுக்கும்.

இதழ்கள் இணைகையில்
சலவை செய்யும்
இதய அழுக்குகள்
கழன்று கொள்ளும்

இமைகள் கதவடைத்து
இதழ்கள் மல்யுத்தம்
இதயம் ஏற்றுக்கொண்ட
காதல் அரங்கேற்றம்..!

எழுதியவர் : செல்வமணி (23-Nov-16, 11:00 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal arangetram
பார்வை : 248

மேலே