பொய்யாது பொழியட்டும்
பொய்யாது பொழியட்டும்....!
கார்பூத்த வான் பொழிந்து
பார்பூத்து வளம் செழிக்கும்
ஏர் தூண்டும் உழவு வழியாகி
பேர் பூண்ட ஈவும் பொழியாகும்
முதிரும் கதிர்கள் நிறைசாய்ந்து
குதிரும் உயரும் வரைகடந்து
கரம் நீண்ட மரம் வான்மேவி
வரம் கொண்ட சிரமாய் தேன்சிந்தும்
தொழுவிடை ஆவினம் பால்சுரந்து
பொழுதுகள் கறவையில் கரைந்தோடும்
கடைக்கழி ஊழியம் வினைவிலகி
இடைவளை பணியால் மனைதுலங்கும்
எடுத்திடும் கள்ளர் குணம் மாறி
கொடுத்திடும் வள்ளல் குலம் சேரும்
பொய்யாது விசும்பு மும்மாரி பொய்யின்
தொய்யாது வியலுலகம் ஓங்காரத்தில் உய்யும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி