மனம் கொத்தி மனிதர்கள்

மனம் கொத்தி மனிதர்கள்...!

இசைப்பது போல் வசைப்பதும்
இணைவதும் பின்னர் கனைப்பதும்

கதைப்பது போல் வதைப்பதும்
நெருங்கி பின்னர் வருத்துவதும்

நம்புவது போல் நயமாய் பேசி
நம்பாமல் பின்னர் குடைப்பதும்

வெட்டி வீணர்களின் வாடிக்கை செயல்
வேடிக்கையாக தள்ள முயன்றால்

வாடிக்கை மறக்காமல் வந்திடுவார்
பாடிக் கறந்து பின் பறந்திடுவார்

நாடி நட்பாய் நடித்துவிட்டு
நம்பிய நம்மை கரு அறுத்திட்டு

இதயத்தை தைத்து பிறர் குருதியில் மகிழும் இழிவுகள்
இருப்பிடம் இரணமாக்கும் மனம் கொத்தி மனிதர்கள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (23-Nov-16, 8:39 pm)
பார்வை : 88

மேலே