விவசாயம்

வெண்முகில் ஒன்றிணைந்து கறுத்து நின்றது
மண்ணின் விழியம்புகள் வானத்திற்குச் சென்றது
காற்றின் திசையில் மேகங்கள் கலையுமோ?...
வற்றிய நிலத்தில் மழைப் பொழியுமோ?......


அளவுக்கு விஞ்சிய மழை நீரில்
அனைத்துப் பயிர்களும் அழுகி விட்டதே...
அன்றிலைவிட அதனிடத்தில் அன்பு கொண்டதால்
அவனை அறியாமலே கண்ணீர் வீழ்ந்ததே......


விழிநீர் மழையில் விவசாயம் வளருமோ?...
வியர்வைத் துளிகளும் உதிரங்களாய்ச் சிதறுமோ?...
விளைச்சல் இல்லாது இளைத்துப் போகிறான்...
விடியும் பொழுதிலும் இருளில் மூழ்குகிறான்......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Nov-16, 11:17 am)
Tanglish : vivasaayam
பார்வை : 1189

மேலே