ஓரிரவில் ஏழைகளாய்

ஏகாந்த வேளையில் இறைவனைப் பார்த்து
ஏனிந்த பிறவி யென்று கேட்டேன்...
ஏகராசி இரவில் வானத்தைப் பார்த்து
ஏக்கத்தில் நீயும் நானும் ஒன்றென்றேன்......


கடற்கரையில் கட்டிய மணல் வீடுகளாய்
உள்ளத்தின் கரையில் கட்டிய வீடுகளை
விழிகள் சிந்திய கோபக் கனலில்
விலாசம் இல்லாது அழித்து விட்டேன்......


ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தும்
ஆறுதல் சொல்ல அன்னை இல்லையே...
தலைச் சாய்க்க மஞ்சம் இருந்தும்
தாலாட்டுக் கேட்கத் தாய்மடி இல்லையே......


மதுவின் நதியில் நீராடி நனைந்து
மாதுவின் பிடியில் தன்னை இழந்து
அறிவுரைக் கூறிய அன்னையின் மொழிகளை
அறிவு இல்லாது மறுத்து விட்டேன்......


போதையின் உச்சத்தில் பேதையை அடித்தேன்...
கதையின் விடியலில் முழுதுமவளை இழந்தேனே...
அன்னையின் அன்பில் ஆகாயத்தை அளந்தவன்
அன்றிரவிலே எல்லாமிருந்தும் ஏழையாய் ஆனனே......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Nov-16, 11:41 am)
பார்வை : 122

மேலே