முகநூல்
என்னைப் பிடிக்காத!
எனக்கு மிகவும் பிடித்த!
ஓர் முகத்தை காணவேண்டாம்
என்று முடிவெடுத்து
ஏதோ காரணத்தால்
பிரிந்து செல்லும் பயணத்தில்
காலையில் முகநூலைத் திறந்தேன்.
முதலாவதாக வந்து நிற்கிறது
"நான் அறிந்தவர்கள்" பட்டியலில்
என்னை மயக்கத்தில்
ஆழ்த்தும் அந்த மலர்முகம்.
சற்று நேரம் என் முடிவுகளைத்
தூக்கி எறிந்துவிட்டு மூழ்கித்தான் போனேன்
இதமான காலைப் பனியுடன்
அதனினும் இதமான அவள் நினைவுகளுடன்.