அவளும் நானும்
ஒளிர்ந்திடும் நிலவானாள் விண்ணில்
மிளிர்ந்திடும் ஒளியானாள் நெஞ்சினில் !
ஐக்கியம் ஆகிவிட்டோம் காதலர்களாய்
ஐந்தொகை பழகினோம் கணக்கர்களாய் !
ஏக்கங்களை எரித்தோம் இணைந்திட்டு
தாபங்களை தணித்தோம் பிணைந்திட்டு !
ஊடல்களைத் தவிர்த்தோம் உறவாடி
கவிதைகளை வடித்தோம் கட்டிலினில் !
மெய்ப்பட விரும்பினோம் கனவுகளை
மெய்மறந்து கழித்தோம் நதிக்கரையில் !
மகிழ்வுடன் வாழ்ந்திட வழிவகுத்தோம்
பகுத்தறிவுப் பாதையில் பயணித்தோம் !
சொப்பனத்தில் நடந்தது இவையாவும்
சொக்கிடவும் வைத்தது உறக்கத்திலும் !
சந்தித்தது தூக்கத்தில் அவளும்நானும்
சந்திப்போம் வாழ்வில் அவளும்நானும் !
( ஐந்தொகை = வரவு , செலவு , கொள்முதல் ,
விற்பனை , கையிருப்பு
ஆகியவற்றின் தொகைகள் )
பழனி குமார்

